கோலிவுட் சினிமா பல பன்முக கலைஞர்களை கண்டுள்ளது. இயக்குநராக இருந்து , சிறந்த இயக்குநராக வளர்ந்தவர்கள் ஒருபுறம் இருந்தாலும் , இயக்குநராகவும் இருப்போம் , நடிகராகவும் இருப்போம் என இன்றைய தலைமுறை இயக்குநர்கள் சினிமா மீதான தாகத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். அப்படியான நடிகர்களுள் இருவர்தான் தம்பி ராமையாவும் சமுத்திரக்கனியும். இருவருமே ஒரு திரையில் தோன்றினால் போட்டி போட்டுக்கொண்டு நடிப்பார்கள். பொதுவாக சமுத்திரக்கனி திரைப்படங்களில் தம்பி ராமையா புகுந்து விளையாடுவார். அப்படித்தான் சாட்டை, விநோதய சித்தம் உள்ளிட்ட படங்களில் இவர்களின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. இருவருமே இயக்குநர்கள் நடிகர்கள் என்பதை தாண்டி , அண்ணன் - தம்பி என்ற வலுவான பாசப்பிணைப்பில் இருக்கிறோம் என சமுத்திரக்கனி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.





அதில் ”எந்த சூழலாக இருந்தாலும் என் அண்ணனுக்கு (தம்பி ராமையா) ஒன்று என்றால் ஓடி போய் நிற்பேன்.நாங்கள் இருவருமே இயக்குநர்கள்தான். ஆனாலும் ஒரு சீனை சொல்லும்போது இயக்குநராக அனுகுவோமா அல்லது நடிகராக அனுகுவோமா என்றால் , நம்பிக்கைதான். தம்பி சொன்னால் சரியாக இருக்குமென அண்ணன் நினைப்பதும், அண்ணன் சொன்னால் சரியாக இருக்கும் என நான் நினைப்பதும்தான் எங்களின் அனுகுமுறை. நாங்கள் தடுமாறும் பொழுது , ஒருவருக்கொருவர் உதவி செய்வோம்.  எனது அமெரிக்க நண்பன் ஒருவர் , விநோதிய சித்தம் திரைப்படத்தில்  அண்ணனின் நடிப்பை பார்த்து திகைத்து போனார். இவர் இப்படியெல்லாம் நடிப்பாரா என என் கையை பிடித்துக்கொண்டு ஆச்சர்யமாக கேட்டான். அந்த கதாபாத்திரத்தை என் அண்ணனை தவிர யாராலும் செய்திருக்க முடியாது.


நாங்கள் பார்வையிலேயே பேசிக்கொள்வோம். அண்ணன் என்ன நினைக்கிறார் என்பதை நான் பார்வையிலையே புரிந்துக்கொள்வேன். சாட்டை படத்திற்கு பிறகு பல்லடத்தில் பட்டிமன்றம் நடந்து. அதில் தலைப்பு தயாளனா?, சிங்க பெருமாளா ? எந்த அப்பா சிறந்த அப்பா  என்பதுதான். எனக்கு கால் செய்து கேட்டாங்க.  முடிவாக நான் சொன்னேன். சிங்கபெருமாள்தான் சிறந்த அப்பா. ஏனென்றால் 75 சதவிகித அப்பாக்கள் அப்படித்தான் இருக்காங்க. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது , அப்பாக்கள் எப்போதுமே தனக்கு கிடைக்காதது தனது குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என நினைப்பார்கள்.மீம்ஸ்களை பார்க்கும் பொழுது,  நான் அதனை மற்றொரு பாத்திரமாகத்தான் பார்க்கிறேன்.


எனது மகன் மீம்ஸ்களை காட்டும் பொழுது , நமக்காக ஒருவர் இப்படியெல்லாம் யோசித்திருக்கிறார்கள். அதுல எது நல்லா இருக்குனு பாரு . படங்கள்ல பயன்படுத்திக்கொள்வோம் என கூறுவேன்.  சுப்பிரமணியபுரம் படம் பண்ண பொழுது , என்னை தியேட்டரில் வைத்தே திட்டினார்கள். சசிக்குமார் , நீ மதுரைக்கெல்லாம் வந்துடாத என்றான். ஆண்கள் , பெண்கள் என வயது வித்தியாசம் இல்லாமல் திட்டினார்கள். நான் தியேட்டரில் அமர்ந்து சிரித்துக்கொண்டே  பார்த்தேன்.  இடைவேளை சமயத்தில் நானும் சசிக்குமாரும் வெளியே வந்து நின்றோம். அப்போது ஒருவர் “ஏய் சசி..அவனை நம்பாத “ என்றார்.” என ஷேர் செய்துள்ளார் சமுத்திரகனி.