விஜய் டிவி மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன்; கடந்த 2020ம் ஆண்டு டிக்டாக் பிரபலமான சூர்யா தேவிக்கும், இவருக்கும் கருத்து மோதல் நடந்தது; இந்த சம்பவத்தில் நாஞ்சில் விஜயனின் வீட்டிற்கு ரவுடிகளோடு சென்று, அவரை தாறுமாறாக தாக்கிய காரணத்திற்காக போலீசார் சூர்யா தேவியை கைது செய்தனர்; 


இது குறித்து அவர் போலீசில் விளக்கமளிக்கையில், “நானும் நாஞ்சில் விஜயனும் 6 ஆண்டுகாலமாக நண்பர்களாக இருந்தோம். என்னுடன் சேர்ந்து வனிதாவை அவதூறாக பேசிவிட்டு, இன்று இருவரும் சமரசம் செய்து கொண்டனர். இது குறித்து கேட்பதற்காகவே நாஞ்சில் வீட்டிற்கு நான் சென்றேன் ஆனால் அவர் என்னை உருட்டுக்கட்டையால் தாக்கி விட்டார் என போலீசில் புகார் அளிக்க ,நாஞ்சில் விஜயன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்;


 




தற்போது சிறையில் இருந்து வெளியில் வந்துள்ள நாஞ்சில் விஜயன் தனது சிறை அனுபவம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசுகையில் " நான் எந்த தப்பும் செய்யவில்லை; ஆனால் காரணமே இல்லாமல் என்னை கைது செய்தார்கள். சிலரின் அழுத்தம் காரணமாக தான் நான் உடனடியாக என்னை கைது செய்துள்ளார்கள் என்பதை புரிந்து கொண்டேன். வெளியில் வந்த பிறகு அது யார் என்பதையும் நான் தெரிந்து கொண்டேன். ஜட்ஜ் வீட்டிற்கு கூட்டிசெல்வதாக கூறி என்னை கிட்டத்தட்ட நான்கு மணி நேரமாக ஜீப்பிலேயே வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருந்தார்கள். அன்றைக்கு இரவு தான் ஜட்ஜ் வீட்டிற்கு கூட்டி சென்றார்கள். உடனடியாக 7 நாட்களுக்கு ரிமாண்ட் செய்தார்கள்; எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னுடைய கதறலை யாரும் கேட்கவேயில்லை. 


அந்த சமயத்தில் நான் சபரி மலைக்கு செல்வதற்காக மாலை போட்டு இருந்தேன்; சிறையில் மாலை போட்டு கொள்ள அனுமதி இல்லை என்பதால், என்னை அதை கழட்டிவிட சொன்னார்கள். ஒன்றை மாதமாக விரதம் இருந்துள்ளேன்; அதை கழட்டி அருகில் இருக்கும் மரத்தில் போட்டுவிடு என கூறும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது.


மிகுந்த மனவேதனையுடன் சாமியே சரணம் ஐயப்பா என ஜெபித்து மாலையை அழுது கொண்டே கழட்டினேன். பிறகு எனது மனதை சமாதானப்படுத்தி கொண்டேன். இதுவும் ஒரு புது அனுபவம்; அதையும் தெரிந்து கொள்ளலாம் என அமைதிப்படுத்திக்கொண்டேன். 


அடுத்த நாள் காலை ஃபைல், ஃபைல் என சத்தம் கேட்டது. பின்னர் தான் தெரிந்து கொண்டேன் ஃபைல் என்றால் கைகளை மடக்கி குத்தவைத்து கொண்டு உட்காரவேண்டும் என்று; அது வரையில் காலை விடிந்த உடன் ஜெயிலை சுற்றிப்பார்க்க வேண்டும் என மிகவும் ஆசை பட்ட எனக்கு அனைவருடன் சேர்த்து குத்தவைத்து உட்கார சொன்னது ரொம்ப கஷ்டமா இருந்தது.


சாப்பாடு எல்லாம் ரொம்ப மோசமாக இருக்கும்; காலையில கொடுக்குற டீ டிகாஷன் கலரு சுடுதண்ணி போல இருக்கும்; எனக்கு கவலையில் பசியே இல்லை; எல்லாரும் பசியில் அங்கு இருக்கும் ஒரு மக்கில் அந்த டீயை ஊற்றி பிஸ்கட்டை தொட்டு சாப்பிடுவார்கள். அது நாமெல்லாம்  பாத்ரூம்ல யூஸ் பண்ணும் மக் போல இருக்கும். அதை நினைச்சாலே எனக்கு இப்ப கூட அழுகையா வருது" என மிகுந்த மனவேதனையுடன் தனது கடுமையான ஜெயில் வாழ்க்கையை பற்றி விவரித்தார் நாஞ்சில் விஜயன். 


நன்றி: behindwoods