தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் நெல்சன் திலீப்குமார். இன்று தனது 39 வயதை எட்டுகிறார்.  வழக்கமான டெம்ப்ளேட்களாக இல்லாமல் நெல்சனின் திரைப்படங்களில் நகைச்சுவைக் காட்சிகள் புதிய பரிமானத்தை கொண்டிருக்கின்றன. இந்தக் காட்சிகள் பெரும்பாலான தமிழ் படங்களில் நாம் பார்க்கும் காட்சிகளில் இருந்து வித்தியாசமான அம்சத்தை கொண்டிருக்கின்றன. அப்படியான காட்சிகளைப் பார்க்கலாம்.


கதாநாயகிகளுடன் டூயட் பாடும் காமெடியன்கள்


ஒரு காமெடியனுக்கு சூப்பர்ஸ்டார் என்று அறியப்படும் ஒரு நடிகருக்கும் ஒரு ரொமாண்டிக் சாங் வைக்க முடியும் என்றால் அது நெல்சனால் மட்டுமே முடியும். கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் மேல் காதல் கொள்ளும் யோகிபாபு தனது காதலை வெளிப்படுத்து வகையில் பாடும் பாடல்தான் எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்திருச்சு டி பாடல் ட்ரெண்ட் ஆனதற்கான முக்கியக் காரணம் இதுவே.


குத்து வாங்கும் கதாநாயகிகள்


சண்டைக் காட்சிகளில் எப்போது ஹீரோயின்களை தள்ளிவிடுவது, கன்னத்தில் அறைவது மட்டுமே நாகரிகம் என்று யார் சொன்னது தெரியவில்லை . காலம்காலமாக தமிழ் சினிமா அதை கடைபிடித்து வருகிறது (ஒரு சில படங்களைத் தவிர) . ஹீரோ மூக்கு வாய் என்று அடிவாங்கிக் கொண்டிருக்க ஹீரோயின்கள் செல்லமாக தட்டிவிடப்படுவார்கள். ஒரு ஹீரோயின் வில்லனிடம் மூஞ்சியிலேயே குத்து வாங்கியதை நீங்கள் நெல்சன் படத்தில் மட்டும்தான் பார்க்க முடியும். டாக்டர் படத்தில் பிரியங்கா மோகன் வாங்குவது போல்.


ஓவரா பேசுனா சுட்டுத் தள்ளு


பீஸ்ட் திரைப்படத்தில் அனைவரும் தீவிரவாதிகளுக்கு பயந்துகொண்டிருக்கு ஒரு கிழவி மட்டும் வாய்க்கு வந்தபடியே பேசிக் கொண்டிருக்கும். நிஜ வாழ்க்கையில் இந்த மாதிரி எத்தனையோ நபர்களை நாம் சகித்துக்கொண்டு வந்திருக்கிறோம். நேரம் காலம் தெரியாம மனதிற்கு வந்தபடி பேசிக் கொண்டிருப்பார்கள். இதற்கு நெல்சனின் சொல்யூஷன் என்னத் தெரியுமா ஒரே புல்லட். பாட்டி க்ளோஸ். உண்மையைச் சொல்லுங்கள் ஒரு நொடி அப்படி ஒரு நிம்மதி வந்ததா இல்லையா.


எனக்கு ஜாலியா இருக்கு


கோலமாவு கோகிலா படத்தில் வரும் தாங்கி தாங்கி காமெடி , டாக்டர் படத்தில் எனக்கு ஜாலியா இருக்கு, டெத் பெட்ல இருக்கன் மா என்று சொல்வதற்கு சம்பந்தமே இல்லாமல் பிரியங்கா சேத்பேட்லயா இருக்கீங்க என்று சொல்வது. மெட்ரோவில் வரும் சண்டைக் காட்சி என நகைச்சுவையில் புதுமையை நிகழ்த்துபவராக இருக்கிறார் நெல்சன்.


பூப்போட்ட சட்டை அணியும் கதாநாயகர்கள்


எந்நேரமும் போருக்குச் செல்ல தயாராக இருப்பதுபோல் தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் உடையணிந்து வரும் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் உள்ளது. பூக்கள் க்யூட்டான நிறங்கள் ஆகியவற்றைப் பெண்களுக்கு மட்டுமானதாக ஒதுக்கிவைத்து வீட்டிருக்கும் சூழலில் நடிகர் விஜய்க்கு கலர் கலராக பூப்போட்ட சட்டைகளை போட்டு அழகு பார்ப்பவர் நெல்சன்.


ஜெயிலர்


தற்போது சூப்பர்ஸ்டாரின் ஜெயிலர் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ரஜினியுடன் இவரது ஹ்யூமர் எப்படி வொர்க் அவுட் ஆகியிருக்கும் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள்.பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயக்குநர் நெல்சன்