விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களைப் போலவே, அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியின் மெகா ஹிட் சீரியல்களில் பாக்கியலட்சுமியும் ஒன்றாகும். இந்த தொடரின் நாயகியான பாக்கியலட்சுமி, அவரது கணவர் கோபி, செழியன் ஆகிய கதாபாத்திரங்கள் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலம்.
இந்த தொடரில் செழியனாக ஆர்யன் என்பவர் நடித்து வந்தார். முக்கிய கதாபாத்திரமான செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யனுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிலையில், திடீரென ஆர்யன் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். இது ரசிகர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செழியனாக நடித்து வந்த ஆர்யன் விலகியதால், அவருக்கு பதிலாக புதிய நடிகர் ஒருவர் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த புதிய செழியன் நடிப்புடன் கூடிய புதிய ப்ரோமோவை பாக்கியலட்சுமி சீரியல் குழுவினரும் வெளியிட்டுள்ளனர்.
பாக்கியலட்சுமி தொடரில் செழியனாக நடித்து வந்த ஆர்யன் தற்போது கனா காணும் காலங்கள் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது. இதன் காரணமாகவே, பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகுவதாக ஆர்யன் கூறியுள்ளார்.
பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியலட்சுமியின் கணவரான கோபி. இத்தனை நாட்களாக தனது மனைவிக்கு தெரியாமல் தனது பள்ளி தோழியுடன் காதலில் சுற்றி வந்தது அனைவருக்கும் தெரியாமல் பரபரபப்பு நீடித்து வந்த நிலையில், தற்போது அந்த விவகாரம் அனைவருக்கும் தெரிந்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கூட்டியுள்ள நிலையில் செழியனாக நடித்து வந்த ஆர்யன் விலகியிருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாகவே விஜய் தொலைக்காட்சி மட்டுமின்றி பிரபல தொலைக்காட்சிகள் பலவற்றின் பிரபல கதாபாத்திரங்களில் நடித்த பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் பாதியிலே விலகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Watch Video : 90ல் அரபிக்குத்து போட்ட ஜனகராஜ்... அதிர்ந்து போன வெளிநாட்டு பார்வையாளர்கள்!
மேலும் படிக்க : Bharathi Kannamma: தயவுசெஞ்சு இதைப் பண்ணுங்கப்பா.. பாரதி கண்ணம்மா இயக்குநரிடம் ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்