சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம், தொடங்கிய நாள் முதல் அடுத்தடுத்த அப்டேட் வரை, ரசிகர்களை குதூகலிக்கும் விதமாக உள்ளது. அந்த வகையில்  சமீபத்தில் வெளியான அப்படத்தின் ‛அரபிக் குத்து’ பாடல், பட்டி தொட்டியெல்லாம் பேசப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் எழுத்தில், அனிருத் இசையில்,ஜொனிட்டா காந்தியின் குரலில் துள்ளல் பாடலாக பலரையும் கவர்ந்துள்ளது. ஜான் மாஸ்டரின் நடனமும் பேசப்பட்டு வருகிறது.



 


இதற்கிடையில் பாடல் வெளியிட்டுக்கு முன்பாக, பாடல் குறித்த ப்ரோமோவுக்கு பேசிய இசையமைப்பாளர் அனிருத், ‛புதிதாக அரபிக்குத்து’ பாடல் ட்ரை பண்ணப் போவதாக கூறுவார். பின்னர் அந்த பாடல், ‛காப்பி’ என்றெல்லாம் செய்திகள் வரத் தொடங்கின. இந்நிலையில், அரபுக்கு குத்து தமிழ்நாட்டிற்கு புதிதல்ல. விக்ரம் படத்தில் அதே போன்ற வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி, ‛ஏன் ஜோடி மஞ்சக்குருவி’ என்கிற பாடலை இளையராஜா இசையமைத்திருப்பார். சோமாலியா நாட்டில் நடப்பதாக காட்டப்படும் அந்த பாடல், இன்றும் பேசப்படும் அரபிக்குத்து. 


இதற்கிடையில், 1990ல் வெளியான ராஜா கைய வெச்சா படத்தில் ஜனகராஜ், ஒரு அரபிக்குத்து பாடலில் ஆடியுள்ளார். என்னது ஜனகராஜா...?  அவர் ஆடினாரா என்று தோன்றும். உண்மை தான், ‛மருதாணி அரச்சேனே...’ என்கிற அந்த பாடலில், ஜனகராஜ் போட்ட ஆட்டம், பலருக்கு தெரிந்திருக்கும். அந்தப்பாடல் இதோ...



இந்த பாடலில், புதுவித கெட்டப்பில் குத்தாட்டம் போடும் ஜனகராஜ், தன் நிறுவனத்திற்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்வார். ஜனகராஜின் அந்த அரபிக்குத்தில் அதிர்ந்து போன முதலீட்டாளர்கள், அந்த பாடலுக்கு அடிமையாகும் படியாக காட்சியமைக்கப்பட்டிருக்கும். பிரபு, கவுதமி, ரேவதி ஆகியோரும் அந்த படத்தில் நடித்திருப்பார்கள். ஜனகராஜின் இந்த அரபிக்குத்து, அன்றும், இன்றும், என்றும், ‛பித்தா பித்தா பித்தாப்பே...’ ரகம் தான். 


பாடல் வெளியிடும் முன்... பாடல் குறித்த ப்ரோமோ வெளியிட்ட அனிருத் வீடியோ இதோ: 



இதோ போல , இன்னும் பல பாடல்கள் 80களிலும், 90-களிலும் வெளியாகி உள்ளது. அவை அரபுக்குத்து ரகமாக கொண்டாடப்பட்டுள்ளன. ஆனால், அவை அரபிக்குத்து என ‛க்ளைம்’ செய்யவில்லை. இளையராஜா தொடாத சாயலே இல்லை. அந்த வகையில், அரபுக்கு குத்துகளையும் அவர் விட்டு வைக்கவில்லை. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண