Jacqueline: என்ன டார்ச்சர் செய்றாங்க... விஜய் டிவி ஜாக்குலின் கூறிய புகார்...நடந்தது என்ன?


விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான "கலக்க போவது யாரு" நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை தொகுத்து வழங்கியவர்கள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் ரக்ஷன். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்தவர்கள் ஈரோடு மகேஷ்  மற்றும் சேது. நடுவர்களுக்கும் தொகுப்பாளர்களுக்கும் இடையில் ஒரு கச்சிதமான உறவு இந்த நிகழ்ச்சியின் இறுதி வரையில் இருந்தது ஒரு சிறப்பு. அது நடைபெற்ற இரண்டு சீசன்களையும் அவர்களே தொகுத்து வழங்கினார். 



வெள்ளித்திரையில் அறிமுகம் :


இப்படி சின்னத்திரையில் வலம் வந்த ஜாக்குலின் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமானார். நயன்தாராவின் தங்கையாக சிறப்பாக நடித்ததன் மூலம் திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 


முக்கிய கதாபாத்திரத்தில் சீரியல் வாய்ப்பு:


பிறகு சின்னத்திரையில் சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் "ஆண்டாள் அழகர்" மற்றும் 'தேன்மொழி பிஏ' ஆகிய தொடர்களில் நடித்தார். இந்த இரண்டு சீரியல்களும் ஜாக்குலினிற்கு  நல்ல பெயரை பெற்று தந்தது. 






பயிற்சியாளர் மீது புகார் :


26 வயதாகும் ஜாக்குலின் சமீபத்தில் உடல் எடை அதிகமானதால் தனது உடல் எடையை குறைப்பதற்கும் ஃபிட்டாக இருப்பதற்காகவும் ஜிம்மிற்கு வழக்கமாக சென்று வருகிறார். கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை வெகுவாக குறைத்து உடல் மெலிந்தும் ஃபிட்டாகவும் தோற்றமளிக்கிறார். தற்போது ஜிம்மில் இருந்து ஒரு வேடிக்கையான வீடியோவைப் பகிர்ந்துள்ளார் ஜாக்குலின். 


 






 


சமீபத்தில் ஜாக்குலின் தனது ஜிம்மில் இருந்து ஒரு விடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஜாக்குலின் தான் மிகவும் சோர்வாக இருப்பதாகவும் தனது பயிற்சியாளர் அவரை சித்தரவதை செய்வதாகவும் வீடியோவில் கூறியுள்ளார். தனக்கு மூச்சு திணறல் மற்றும் நுரையீரலில் வலி இருப்பதாகவும் புகார் அளித்தும் பயிற்சியாளர் அது இயல்பானது என்றும் தனது பயிற்சியை தொடருமாறும் கூறியுள்ளார் என்றும் அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார் ஜாக்குலின். அடுத்து நடப்பதை தனது இரண்டாவது வீடியோவில் பகிர்வதாக உறுதியளித்தார் ஜாக்குலின்.