விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ள நிலையில் சில சீரியல்களின் ஒளிபரப்பு நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 






சின்னத்திரை நிகழ்ச்சிகள் வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது.  என்னதான் டிஜிட்டல் யுகத்தை நோக்கி பார்வையாளர்கள் நகர்ந்தாலும் வார நாட்களில் சீரியலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களும் இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர். அதனால் தான் காலம் கடந்தும் பல சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் மறக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. 


அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்குகிறது. சீசன் 4 மற்றும் சீசன் 5 அக்டோபர் மாதத்தில் தொடங்கியது போல் இந்த சீசனும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கியுள்ளது. கடந்தாண்டு கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து சில எபிசோட்களை நடிகை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அதன்பின் அறிமுகம் செய்யப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கினார். 






இப்படி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தினமும் வார நாட்களில்  இரவு 9.30 மணிக்கும், வார இறுதி நாட்களில் இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. இதனால் விஜய் டிவி சீரியல்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மௌனராகம் 2 மாலை 6 மணிக்கும், தமிழும் சரஸ்வதியும் மாலை 6.30 மணிக்கும், ராஜா ராணி 2 சீரியல் இரவு 7 மணிக்கும், ஈரமான ரோஜாவே- 2 இரவு 7.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது பேவரைட் சீரியல்களை பணிச்சூழலுக்கு மத்தியில் பார்க்க இயலுமா என தங்களது வருத்தத்தை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.