குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆகவும், மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த ஷோ தான் ’குக் வித் கோமாளி’. மற்ற குக்கிங் நிகழ்ச்சிகளை விட வித்தியாசமாக கோமாளிகளும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை, புகழ், சிவாங்கி, பாலா, சுனிதா போன்ற பல கோமாளிகள் கலந்துக்கொண்டனர்.

குறிப்பாக மற்ற கோமாளிகளை விட மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் புகழ். இந்நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தாலும் இந்த நிகழ்ச்சி மட்டுமே புகழுக்கு ஏராளமாக ரசிகர்களைப்பெற்று தந்தது. இப்படி முதல் சீசன், இரண்டாவது சீசன், மூன்றாவது சீசன் என இவரின் லூட்டிகளுக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது.

குக் வித் கோமாளி கிடைத்த புகழுக்கு பிறகு புகழ் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து சந்தானத்தின் 'சபாபதி', அஜித்தின் 'வலிமை', அஸ்வின் நடித்த ’என்ன சொல்லப் போகிறாய்’, சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார், மேலும் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் நடிகர்புகழ், பென்ஸ்ரியாஎன்பவரைகாதலிப்பதாககூறியிருந்தார். இன்னும்சிலமாதங்களில்தங்களுக்குதிருமணம்என்றும்கூறியிருந்தார். இந்நிலையில், தற்போதுதனதுஇன்ஸ்டாகிராம்பக்கத்தில்தனதுகாதலியுடன்போட்டோஷூட்நடத்திஅந்தபுகைப்படத்துடன் ' கம்மிங் ஸூன்' எனபதிவுசெய்துள்ளார். இதனால், விரைவில்புகழுக்குதிருமணம்எனஉறுதியாகியுள்ளது. இதற்க்கு விஜய்டிவி நட்சத்திரங்களும், ரசிகர்கள்பலரும்தங்களதுவாழ்த்தைதெரிவித்துவருகிறார்கள்

நடிகர் புகழ் தற்போது சினிமாவில் தீவிரமாக உள்ளதாகவும், 'மிஸ்டர் ஜூ கீப்பர்' என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.