தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் மாஸ் நடிகராக இருக்கும் நடிகர் விஜய்க்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய் ரசிகர் மன்றம் என்ற பெயரில் ஏராளமான ரசிகர் மன்றங்கள் மக்களுக்கு சில நல உதவிகளை செய்து வருகிறார்கள். 



இன்று முன்னணி நடிகராக இருக்கும் விஜயின் திரைப்பயணம் ஒன்றும் அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. ஒரு இயக்குனரின் மகன் என்ற போர்வையில் அவர் திரைத்துறையில் நுழைந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் அவரின் தந்தையின் படங்களின் மூலமே அவர் நடித்திருந்தாலும், கடுமையான விமர்சனங்கள், சறுக்கல்கள், தோல்விகள், அவமானங்கள், சங்கடங்கள் இவை அனைத்தையும் தாண்டியே இன்று இந்த அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.


ஆல்ரவுண்டர் :


கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த விஜய், அதன் பின்னர் அடுத்தடுத்து டார்கெட் செய்தது மாணவர்கள், பெண்கள், காதலர்கள், குழந்தைகள்; அந்த வியூகமும் நன்றாக ஒர்க் அவுட் ஆக  கொஞ்சம் கொஞ்சமாக அவரின் வளர்ச்சியை கண் முன்னே பார்க்க முடிந்தது. திரையில் மட்டுமே மாஸான தோற்றத்தில் இருக்கும் விஜய் நிஜ வாழ்க்கையில் மிகவும் இயல்பானவர். மிகவும் சாதாரணமானவர் என்பதை பலரும் பல முறை கூறியுள்ளார்கள். 


நல்லுள்ளம் படைத்த விஜய் :


நடிகர் விஜயின் மற்றுமொரு சிறப்பு அவரின் நடனம். அன்று போலவே இன்றும் டான்ஸ் மாஸ்டர்களுக்கு டஃப் கொடுக்கும் ஒரு நடிகர். தங்கையின் மீது மிகுந்த பாசம் கொண்ட இந்த நடிகர் தங்கையின்  பெயரில் அறக்கட்டளை ஒன்று நடத்தி வருகிறார். அதன் மூலம் ஏராளமான குழந்தைகளின் கல்வி செலவு மற்றும் பல சமூக சேவைகளை செய்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். தங்கையின் மீது இருக்கும் அளவு கடந்த பாசத்தால்தான் என்னவோ விஜயின் பெரும்பாலான படங்களில் தங்கச்சி செண்டிமெண்ட் காட்சிகள் அதிகம் இருக்கும். 


 



விஜய்யின் கல்லூரி வாழ்க்கை :


லயோலா கல்லூரியில் B.Sc விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கையில் படிப்பை விடவும் நடிப்பில்தான் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தாராம் விஜய். கிளாசில் இருப்பதை காட்டிலும் விஜய் பெரும்பாலும் நண்பர்களுடன் கல்லூரியின் சுவரில்தான் உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருப்பாராம்; கல்லூரியை பங்க் அடித்து விட்டு சினிமாவுக்கு சென்ற நாட்களே அதிகம் என்று சொல்லுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்;


படிப்பை காட்டிலும் நடிப்பதிலேயே அவரின் முழு ஈடுபடும் இருந்ததால், கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க வந்துவிட்டார் விஜய். அந்த வகையில் இது குறித்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடிகர் விஜய்க்கு நடைபெற்றுள்ளது. நடிகர் விஜய் ஒரு முறை கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற போது ஒரு சிறுவன் விஜயிடம், ”நீங்கள் எத்தனாவது வரைக்கும் படிச்சு இருக்கீங்க என கேட்க வெட்கத்தில் முகம் சிவந்த நடிகர் விஜய் நான் B.Sc ஃபர்ஸ்ட் இயர் வரை படிச்சேன் அதுக்கு அப்புறம் ஏறல அதனால வந்துட்டேன்” என்றார். அவரின் இந்த பதிலை கேட்ட அங்கிருந்த அனைவரும் கரகோஷத்தில் கொண்டாடினர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.