The GOAT: ராயன் பட வசூலை இரண்டே நாளில் அடிக்கும்.. பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கப்போகும் விஜய்
The GOAT Box Office Collection: விஜயின் தி கோட் திரைப்படம் தனுஷின் ராயன் பட வசூலை வெறும் இரண்டே நாட்கள் முறியடிக்கும் என சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன

தி கோட்
விஜயின் தி கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தி கோட் திரைப்படம் முதல் நாள் முன்பதிவுகளில் மட்டுமே உலகளவில் 25 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜயின் கோட்டை என்று சொல்லப்படும் சென்னை ரோகிணி திரையரங்கில் மட்டுமே இதுவரை 20 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளன. சென்னை மற்றும் அதன் சுற்றுபுறத்தில் உள்ள நகரங்களில் முதல் நான்கு நாட்களுக்கு திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல்லாகி இருக்கின்றன.
Just In




ஒருபக்கம் இப்படத்திற்கு பெரிதாக ஹைப் கொடுக்கக் கூடாது என்பதில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கவனமாக இருக்கிறார். ஆனால் இன்னொரு பக்கம் நடிகர் பிரேம்ஜி மற்றும் நடிகர் வைபவ் இருவரும் சேர்ந்து படத்திற்கு பயங்கரமாக ஹைப் கொடுத்து வருகிறார்கள். இப்படம் உலகளவில் மொத்தம் 1000 முதல் 1500 கோடி வசூலிக்கும் என படத்தில் நடித்துள்ள நடிகர் பிரேம்ஜி தெரிவித்துள்ளது படத்தின் மீது பல மடங்கு எதிர்பார்ப்புகளை கூட்டியுள்ளது. தற்போது தி கோட் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் எடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராயன் வசூலை இரண்டே நாளில் முறியடிக்குமா தி கோட்?
தி கோட் படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடி என்றும் இதில் நடிகர் விஜயின் சம்பளம் மட்டுமே 200 கோடி என்றும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படத்தை எடுத்தும் தங்களுக்கு இப்படம் லாபம்கரமானதாக இருக்கிறது என்றும் அவர் கூறினார். படத்தின் ஓடிடி உரிமம் மற்றும் சேட்டலைட் உரிமம் மட்டுமே 200 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இப்படியான நிலையில் தி கோட் படம் வெளியான முதல் நாளிலேயே 120 முதல் 130 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு தமிழில் வெளியாகி அதிக வசூல் ஈட்டிய படங்களில் ராயன் படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இப்படம் உலகளவில் 160 கோடிவசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராயன் படத்தின் இந்த வசூலை விஜயின் தி கோட் படம் முதல் இரண்டே நாட்களில் முறியடிக்கும் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தி கோட் திரைப்படம் தனுஷின் ராயன் படத்தின் வசூலை முதல் இரண்டே நாட்களில் முறியடிக்கும் என சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.