தளபதி 68 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி


லியோ படப்படிப்பை முடித்துக் கொண்டு உற்சாகமாக நடிகர் விஜய் பட ரிலீசுக்காக காத்திருக்கிறார். மாஸ்டர் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாம் முறையாக விஜய் கூட்டணி வைத்துள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.


இதனிடையே தளபதி 68 திரைப்படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுடன் விஜய் கூட்டணி வைத்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு லியோ வெளியீட்டுக்கு முன் தொடங்கும் என்றும், விஜய் பிகில் படத்துக்குப் பிறகு இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


ஜோடியாகும் பிரியங்கா மோகன்


மேலும் இப்படத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் நடிகை ஜோதிகாவுடனும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடனும் இணைவதாக தகவல்கள் முன்னதாக வெளியாகின.


இந்நிலையில், மற்றொரு ஹீரோயினாக இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் இணைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


மேலும், இப்படத்தில் வெந்து தணிந்தது காடு, யூ டர்ன், கேப்டன் மில்லர் படங்களின் ஒளிப்பதிவாளரான சித்தார்த்தா நூனி பணியாற்றுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


யுவனுடன் இணையும் தமன்


தளபதி 68 திரைப்படம் வெங்கட் பிரபுவின் சென்னை 28 படத்தைப் போல கிரிக்கெட்டை மையப்படுத்தி இருக்கும் என்றும், இப்படத்துக்கு சிஎஸ்கே என பெயரிடப்பட உள்ளதாகவும், கேப்டன் கூல் தோனி இப்படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் முன்னதாக வெளியாகின.


அதேபோல், இப்படத்தில் யுவனுடன் இசையமைப்பாளர் தமனும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.  சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக தற்போது தமன் பங்கேற்று வரும் நிலையில், விரைவில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து ப்ரோகிராமராக பணியாற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், வாரிசு படத்துக்குப் பிறகு தமன் இரண்டாம் முறையாக விஜய் உடன் கைக்கோர்ப்பதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.


எதிர்பார்ப்புகளை எகிறவைக்கும் லியோ 


விஜய்யின் 67ஆவது திரைப்படமான லியோ வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.


த்ரிஷா, சஞ்ஜய் தத், அர்ஜூன், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப்,  கெளதம் மேனன், மிஷ்கின் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.


லோகேஷ் கனராஜ் யுனிவர்ஸ் எனப்படும் எல்.சி.யு பற்றி ரசிகர்கள் பெருமளவில் விவாதித்து வரும் நிலையில், லியோ திரைப்படமும் எல்சியுவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.