comedy ராஜா கலக்கல் ராணி என்ற புதிய நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.


விஜய் டிவியில் ஒளிபரப்பான, ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மிகவும் வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும். இந்த சேனலின் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும். இருந்துகின்றன.


குறிப்பாக கலக்கப்போவது யாரு, கிங்க் ஆஃப் காமெடி, சூப்பர் சிங்கர், பிக்பாஸ், நீயா நானா உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம். சமீபத்தில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி ஆகும், சீசன் 1, சீசன் 2 என கடந்து இந்த நிகழ்ச்சி பிரபலமாக சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் புகழ், பாபா பாஸ்கர், நடிகை ஷகிலா, நடிகர் அஸ்வின் உள்ளிட்டோர் சமீபகாலமாக மக்களின் மனதை ஆட்கொண்ட நபராக உள்ளனர்.


தற்போது, comedy ராஜா கலக்கல் ராணி என்ற புதிய நிகழ்ச்சி, விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் 27ஆம் தேதி ஞாயிறுக் கிழமை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 






 


 


இந்த நிகழ்ச்சியில், ராஜாவாக, ராணியாக இரண்டு பேர் பங்குபெறுகின்றனர். இவர்கள் அனைவரும் விஜய் டிவியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். புகழ் - அர்ச்சனா, ராஜவேலு - தர்ஷா குப்தா, ஷாபனம் - யோகி, ரித்திகா - பாலா, ராமர் - தீபா ஆகியோர் comedy ராஜாவாகவும், கலக்கல் ராணியாகவும் நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளனர்.