அமெரிக்காவின் டைம் ஸ்கொயரில் நடிகர் விஜயின் பிறந்தநாளையொட்டி ஸ்பெஷல் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  


இது தொடர்பான வீடியோ டிவிட்டரில் பகிரப்பட்டுள்ள நிலையில் ஏராளமான லைக்குகளை குவித்து வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் நடிகர் விஜயின் பிறந்தநாள் வரும் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


இந்நிலையில் கனடாவில் இருக்கும் விஜய் ரசிகர்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் டைம்ஸ் சதுக்க பில்போர்டில் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ வரும்படி செய்துள்ளனர். தெறி, சர்க்கார், மாஸ்டர் உள்ளிட்ட பட கிளிப்பிங்க்ஸ் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. 


விஜயின் பிறந்தநாளையொட்டி அவரின் ரசிகர்கள் ஜூன் மாதம் பிறந்தது முதலே விதவிதமான போஸ்டர்களை ஒட்டி அசத்தி வருகின்றனர். ஜய் தன் 49ஆவது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை அவரது ரசிகர்களும் விஜய் மக்கள் இயக்கத்தினரும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 


இதற்கிடையே புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ‘தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய்’ என பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும்  நிலையில், இந்த பேனர் சர்ச்சையை எழுப்பி உள்ளது. 


கடந்த ஜூன் 17ஆம் தேதி, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு விஜய் மக்கள் இயக்கம்  விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் விஜய் ஆற்றிய 8 நிமிட உரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையி விஜய் அரசியலுக்கு வருவது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டிடிவி தினகரன், உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்தனர்.


வாக்குக்கு பணம் வாங்க கூடாது என விஜய் பேசிய கருத்தை ஏராளமான அரசியல் தலைர்களும், பொதுமக்களும் ஆதரித்து வருகின்றனர்.