சூர்யா 45


கங்குவா படத்திற்கு அடுத்தபடியாக சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 45 ஆவது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் கோயம்புத்தூரில் தொடங்கியது. த்ரிஷா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் முன்னதாக இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டார். பின் தனிப்பட்ட காரணங்களால் இப்படத்தில் இருந்து அவர் விலகினார். ரஹ்மானுக்கு பதிலாக கட்சி சேர , ஆச கூட ஆகிய பாடல்களுக்கு இசையமைத்த சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். சூர்யா 45 படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


வில்லனாகும் விஜய் சேதுபதி 






சூர்யா சமீபத்தில் நடித்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றிபெறாதது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. எதற்கும் துணிந்தவன் , கங்குவா என அடுத்தடுத்து இரு படங்கள் சூர்யாவுக்கு தோல்வியை தழுவியுள்ளன. இப்படியான நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூர்யா 44 மற்றும் தற்போது உருவாகி வரும் சூர்யா 45 ஆகிய இரு படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 


முன்னதாக எல்.கே.ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களை இயக்கிய ஆர்ஜே பாலாஜி முதல் முறையாக ஆக்‌ஷன் ஜானரில் களமிறங்க இருக்கிறார். சூர்யா 45 எந்த மாதிரியான படமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வரும் நிலையில் தற்போது இப்படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்டர் , விக்ரம் , ஜவான் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி சமீபத்தில் தான் இனிமேல் வில்லன் ரோலில் நடிக்க மாட்டேன் என தெரிவித்திருந்தார். வேண்டாம் என்று விலகிப்போனாலும் விஜய் சேதுபதியை வில்லன் கேரக்டர்கள் விடுவதில்லை.  இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம் 


Siddharth : உங்களுக்கு பிடிக்கலனா நான் சாகமுடியாது...இந்தியன் 2 விமர்சனத்திற்கு சித்தார்த் பதில்


Pushpa 2 Collection : ஆறு நாளில் ஆயிரம் கோடி தொட்ட புஷ்பா 2...அடுத்த இலக்கு 2000 கோடி