புஷ்பா 2 


சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானது. ராஷ்மிகா மந்தனா , ஃபகத் ஃபாசில் , முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தேவிஶ்ரீ பிரசாத் பாடல்களுக்கும் சாம் சி.எஸ் பின்னணி இசையமைத்துள்ளார். புஷ்பா முதல் பாகத்திற்கு தமிழ் , தெலுங்கு தவிர்த்து இந்தி ரசிகர்களிடையே பரவலாக கவனம் பெற்றது. மேலும் இரண்டாம் பாகத்திற்கு வடமாநிலங்களில் அளவுகடந்த எதிர்பார்ப்பு இருந்தது. பாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்றழைக்கப்படும் ஷாருக் கானின் ஜவான் படத்தின் வசூலையே புஷ்பா 2 படம் முறியடித்துள்ளது. 


ஆறு நாளில் ஆயிரம் கோடி


 புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ 282 கோடி வசூலித்தது. முன்னதாக ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் முதல் நாளில் 233 கோடி வசூலித்து அதிக வசூல் ஈட்டிய படங்களில் முதலிடத்தில் இருந்தது. புஷ்பா 2 திரைப்படம் இந்த சாதனையை முறியடித்தது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் படம் இந்திய சினிமாவின் வரலாற்றில் பார்க்காத வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது படம் வெளியாகிய ஆறு நாட்களில் உலகளவில் ரூ 1000 கோடி வசூலித்துள்ளது புஷ்பா 2. 






ஆயிரம் கோடி வசூல் ஈட்டிய பட்டியலில் ஆமீர் கான் நடித்த தங்கல் , பாகுபலி 2 , ஆர்.ஆர் ஆர் , கே.ஜி.எஃப் 2 , ஷாருக் கான் நடித்த பதான் , ஜவான், பிரபாஸ் நடித்த கல்கி முதலிய படங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த பட்டியலில் புஷ்பா 2 படம் இடம்பிடித்துள்ளது. இடம்பிடித்தது மட்டுமில்லை அதிவேகமாக ஆயிரம் கோடி வசூல் ஈட்டிய படமாக புஷ்பா 2 படம் சாதனை படைத்துள்ளது. 


 



மேலும் படிக்க : Top 10 Tamil Movies : அரண்மனை முதல் அமரன் வரை... இந்த ஆண்டின் டாப் 10 படங்கள்...


வெறித்தனமாக ரெடியாகும் விடாமுயற்சி முதல் பாடல்..இணையத்தில் பரவும் புகைப்படம்