நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் வசூலும் எகிறியுள்ளது. 


தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி. நீண்ட நாட்களாக ஒரு வெற்றிப் படத்துக்காக ஏங்கி கிடந்த அவருக்கு சரியான தீனி போட்டுள்ளது “மகாராஜா” படம். இது விஜய் சேதுபதியின் 50வது படமாகும். நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ள இப்படத்தில் மமதா மோகன் தாஸ், அபிராமி, அனுராக் காஷ்யப், நட்டி, முனீஷ்காந்த், சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 







புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார். போஸ்டர், ட்ரெய்லர் என எதிர்ப்பார்ப்பை எகிற வைத்த மகாராஜா படக்குழு, அதனை 100% பூர்த்தி செய்துள்ளது. திரையிட்ட இடமெல்லாம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் படத்தை பாராட்டி தள்ளுகின்றனர். 


சாதாரண கதையை ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும் அளவுக்கு திரைக்கதை அமைத்து நித்திலன் சுவாமிநாதன் அசத்தியுள்ளார். நடிகர் நட்டி தனது சமூக வலைத்தளப்பதிவில், “என்னுடய உழைப்பு பாராட்டப்பட்டால் அதன் காரணம் இயக்குனர் நிதிலன் மட்டுமே..மகாராஜா ஆகச்சிறந்த திரைப்படம், அதன் சிறந்த உழைப்பு இயக்குனர் நிதிலன் அவர்களையும் கதானாயகன் விஜய் சேதுபதி அவர்களையும் சென்றடயும்..பாராட்டும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி” என கூறியுள்ளார். 


<






இதேபோல் லோகேஷ் கனகராஜ், கீர்த்தி சுரேஷ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் படத்தை பாராட்டியுள்ளனர். இந்த வருடத்தின் மிக முக்கியமான படம்  இதனிடையே மகாராஜா படம் முதல் நாளில் ரூ.3.60 கோடி வசூலை ஈட்டியதாக sacnilk இணையதளம் தெரிவித்திருந்தது. இதனிடையே 2வது நாளில் இப்படம் ரூ.6.20 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எது எப்படியோ 2வது நாளில் வசூல் எகிறியதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.