மனிதனின் நாகரிக மற்றும் பரிணாம வளர்ச்சிக்கு, ஆதி மனிதன் கண்டுபிடித்த நெருப்பு மிக முக்கிய இடத்தை பிடித்தது.இதன் பிறகு தான் மனிதனின் வளர்ச்சி வேகம் எடுத்தது என்பது அறிவில்லாதவர்களின் கூற்று. உணவு சமைத்தார்கள், அந்த நெருப்பு இரவு நேரங்களில் ஆதிமனிதருக்கு வெளிச்சத்தை கொடுத்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, நெருப்பு தான் இரவு நேரங்களில் மனிதர்களுக்கு வெளிச்சத்தை கொடுத்து வந்தது.


விளக்குகளுக்கு மாற்றாக வந்த, பெட்ரோமாக்ஸ் (பரஃபீன் அழுத்த விளக்கு) மிகப்பெரிய புரட்சி ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில், செந்தில் கவுண்டமணி பெட்ரோமாக்ஸ் காமெடி மிகவும் பிரபலம். பெட்ரோமாக்ஸ் வரலாறு என்ன ? அது எப்படி எரிகிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம். 


மூடகம் (Gas mantle)


1885 ஆம் ஆண்டு கார்ல் அவுர் வான் வெல்ஸ்பாக் ( Carl Auer von Welsbach ) மூடகம் (Gas mantle) என்பதை கண்டுபிடித்தார். மூடகம் (Gas mantle) என்பது காட்டன் துணியை எடுத்து 99 சதவீதம் தோரியும், ஒரு சதவீதம் சீரியம்(IV) ஆக்சைடு ஆகிய இரண்டையும் சேர்ந்த கலவையில், காட்டன் துணியை முக்கி எடுத்தால் மூடகம் (Gas mantle) தயாராகிவிடும். இதுபோன்று உருவாக்கப்படும் மூடகத்தில் நெருப்பை வைத்து எரித்த பிறகு, அது சாம்பலாக மாறி எலும்புக்கூடு போல் காட்சியளிக்கும், அதில் நெருப்பு பட்டால் மிகவும் பிரகாசமாக ஜொலிக்கும், இதுதான் பெட்ரோமாக்ஸ் விளக்கு எரிவதற்கான மிக அடிப்படையை காரணம்.


 புரட்டி போட்ட புரட்சி


மூடகம் (Gas mantle) பயன்படுத்தி பல்வேறு விளக்குகள் அக்காலகட்டத்தில், பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனாலும் பெட்ரோமாக்ஸ் விளக்கு கண்டுபிடிக்க ஒரு சில ஆண்டு காலம் எடுத்துக் கொண்டது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஏகுரிச் & கிரெத்சு என்ற நிறுவனத்தின் தலைவர் மாக்சு கிரெட்சு என்பவர் முதல் முறையாக, மாண்டில் மற்றும் மண்ணெண்ணெய் துணையுடன் எரியக்கூடிய புகை போக்கி விளக்கு விளக்குகளை கண்டுபிடித்தார். இதனைத் தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து அந்த நிலத்திற்கு, பெட்ரோமாக்ஸ் விளக்கு என பெயர் வைக்கப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. கொண்டுவரப்பட்டதிலிருந்து அதன் விற்பனை சூடி பிடிக்க துவங்கியது. ஒரு காலகட்டத்தில் 80 சதவீதமான உலகத்தின் வெளிச்சத்துக்கான தேவையை பெட்ரோமாக்ஸ் விளக்குகள் பூர்த்தி செய்து இருந்தன. 


பெட்ரோமாக்ஸ் எப்படி செயல்படுகிறது ?


அரிக்கேன் விளக்குகளை அடிப்படையாகக் கொண்டு அதன் உருவம் வடிவமைக்கப்பட்டது. அரிக்கேன் விளக்கு அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதால், காற்று நேரடியாக செல்லாமல், இருபுறங்களில் இருக்கும் காலியான இரும்பு குழாய் வழியாக காற்று செலுத்தப்படும், அந்த மூலக்கூறு பெட்ரோமாக்ஸ் விளக்கு பயன்படுத்தப்பட்டது. பெட்ரோமாக்ஸ் அடிப்பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்ற டேங்க் இருக்கும், பிரஷர் கொடுப்பதற்காக பம்ப் இருக்கும் ( வேப்பரைசர் ) பம்ப் செய்யப்பட்டவுடன் மண்ணெண்ணெய் மேல் நோக்கி செல்வதற்காக, குழாய் மாதிரியான அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். 




முதலில் மண்ணெண்ணெய் அடுப்பு எரிவதைப் போல், நெருப்பு எறிய துவங்கும் ( Pre Heat ) இதனால் விளக்கு சூடாகும். விளக்கு சூடாக இருப்பதால், டேங்கில் இருந்து வரும் மண்ணெண்ணெய் ஆவியாக துவங்கும். கீழே பம்ப் செய்தவுடன் , அழுத்தத்தின் விளைவாக மேல் நோக்கி செல்லும். எவ்வளவு மண்ணெண்ணெய் மேல்நோக்கி செல்ல வேண்டும் என்பதை, கண்ட்ரோலர் கொடுக்கப்பட்டிருக்கும்.


பிரகாசமாக எரிவது எப்படி ?


மேல் நோக்கி செல்லும், ஆவியான மன்னனை சிறிய தொலை வழியாக வெளியேற்றப்படும்,அந்த இடத்தில் சிறிய அளவில் இடம் ஒன்று இருக்கும், அந்த இடத்தில் வெளியில் இருந்து காற்று வந்து போவதற்கான துளைகள் செய்யப்பட்டு இருக்கும், அங்கு இருக்கும் ஆக்சிஜனை பயன்படுத்தி ஆவியான மன்னனை எரியத் துவங்கும், அங்கு இருக்கும் பர்ணருக்கு (Burner) செல்லும் அங்கிருந்து எரியத் துவங்கும். அந்த இடத்தில் மாண்டில் இருப்பதால், அதில் பட்டு வெளிச்சம் மிகவும் பிரகாசமாக எரியும்


மாண்ட்டில் என்பதுதான் இந்த விளக்கி இதயமாக உள்ளது, ஆனால் அதை சரியாக பயன்படுத்தினால் 30 ஆண்டுகள் வரை கூட தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு அம்சம். எனவேதான் அக்கால கட்டத்தில் அனைத்து தரப்பு மக்களால் பயன்படுத்தப்பட்ட விளக்காக இந்த விளக்கு இருந்து வந்துள்ளது. இக்காலகட்டத்தில் கூட பல்வேறு சமயங்களில் இந்த விளக்கு பயன்படுத்தப்படுகிறது. மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் இப்பொழுதும் இவ்வகை விளக்குகள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது