இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி  தனது விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அவரே தயாரித்த திரைப்படம் "முகிழ்". கார்த்திக் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - ரெஜினா கசான்ட்ரா ஜோடியாக நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா அவரின் மகளாகவே நடித்துள்ளார். சென்ற ஆண்டு அக்டோபர் 8ம் தேதி வெளியான இப்படம் இன்றுடன் தனது முதலாம் ஆண்டை நிறைவு செய்கிறது. இந்த தினத்தை கொண்டாடும் விதமாக விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் "1 இயர் ஆஃப் முகிழ்" எனும் ஒரு போஸ்ட்டரை வெளியிட்டுள்ளார். 


 




விஜய் சேதுபதியின் மகனை தொடர்ந்து மகளும் திரையில் அறிமுகம் :


எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள்  அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக நடித்த ரெஜினா கசான்ட்ரா ஒரு 12 வயது குழந்தையின் தாயாக மிகவும் இயல்பாக நடித்தது பாராட்டை பெற்றது. இப்படத்தின் மூலம் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஏற்கனவே விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, சிந்துபாத் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். மகனை தொடந்து மகளும் தற்போது முகிழ் படத்தில் நடித்துவிட்டார். 


 







குழந்தைக்கும் - பெற்றோருக்கும் இருக்கும் பந்தம்:


படத்தின் டிரைலர் வெளியாகி ஒன்பது மாதங்கள் கடந்த பிறகு தான் படம் திரையரங்குகளில் அக்டோபர் 8ம் தேதி வெளியானது. பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையில் இருக்கும் உறவு குழந்தைகளை எப்படி கையாளுகிறார்கள் என்பது தான் படத்தின் மையக்கரு. இது மிகவும் அழகாக கையாளப்பட்டுள்ளது. படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடக்கும் சம்பவங்களை நமது வாழ்க்கையோடு கனெக்ட் செய்யும் விதத்தில் படமாக்கப்பட்டு  இருந்தது இதன் சிறப்பம்சம். 



இப்படத்தின் மூலம் நடிகை ரெஜினா முதல் முறையாக டப்பிங் பேசியிருந்தார். தமிழில் டப்பிங் பேசுவது இது தான் முதல் முறை என்பதால் சற்று மெனக்கெட்டு டப்பிங் பேசியிருந்தார். படத்திற்கு பக்க பலமாக இருந்தது பாடல்கள். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ரேவா. 


 







குறைந்த நீளம் கொண்ட திரைப்படம் :


இப்படத்தின் நீளம் 90 நிமிடங்கள் மட்டுமே என்பதால் முதலில் ஓடிடியில் வெளியிட திட்டமிட்டனர். குறைந்த நீளமுடைய படத்தை திரையரங்குகளில் வெளியிட யோசித்த திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் பின்னர் விஜய் சேதுபதியின் தீவிர முயற்சியால் படம் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி வெளியானது. இன்றுடன் படம் ஒன்றாம் ஆண்டை நிறைவு செய்கிறது. திரையரங்கில் வெளியான ஓரிரு மாதத்திற்கு பிறகு நெட்பிள்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது முகிழ்.