தமிழ் சினிமாவில் தனித்துவமான ஒரு நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய் சேதுபதி. சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் படங்களை காட்டிலும் தனித்து தெரியும் படங்களில் நடிக்கும் ஒரு சில நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டபோது அவர் விக்னேஷ் சிவன் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். 




ஆரம்பகாலக் கட்டத்தில் சினிமா துறையில் நுழையும் போது நாம் சில இயக்குனர்களை சந்திப்போம். அவர்கள் ஒவ்வொருவரிடமும் வேலை செய்யும் போது ஒவ்வொரு விஷயத்தை கற்றுக்கொள்வோம். அவர்களுடைய ஸ்டைல் எண்ணங்களின் பிரதிபலிப்பாக தான் எனக்கு கிடைத்த இந்த வாய்ப்புகளை பார்க்கிறேன். அவர்களுடன் கலந்து உரையாடி பழகிய அனுபவம் ஒரு பொக்கிஷம். நான் பணிபுரிந்த அற்புதமான படங்களின் மூலம் பணிபுரிந்த அத்தனை அற்புதமான இயக்குநர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்து இருந்தார். 


அப்படி 'நானும் ரவுடிதான்' படத்தின் பர்ஸ்ட் ஷூட் முடிந்ததும் விக்னேஷ் சிவனுக்கு நான் போன் பண்ணி நீ எனக்கு நடிக்க சொல்லியே கொடுக்கல, நீ என்னை சரியா புரிஞ்சுக்கல என  சண்டை போட்டேன். ஒரு நாலு நாளுக்கு அப்புறம் நயன்தாரா என்கிட்டே வந்து எங்க இரண்டு பேருக்கும் இடையில் என்ன பிரச்சினை என கேட்டாங்க. பாண்டி கேரக்டரா கொஞ்சம் ஹைப்பா பண்ண சொல்றான் என நான் நயன்கிட்ட சொன்னேன். 



விக்கி என்கிட்டே கதைசொல்லும் போது அது ரொம்ப அழகா இருந்தது. அதை நான் ரசித்தேன். அதே மாதிரி நான் பண்ண ட்ரை பண்ணேன். எங்க இரண்டு பேருக்கும் இடையில் புரிதல் வர, ஒரு நாலு ஐந்து நாள் ஆச்சு. அந்த கேரக்டர் பண்ணறது ரொம்ப கஷ்டம். அவனுக்கு அழுகை வருதுன்னா அழணும். அதே நேரத்தில் சிரிக்கணும். அதே மாதிரி நல்லவன்.. ஆனா பிராட். இப்படி வேற வேற காம்பினேஷன்ஸ் நிறைய இருக்கும். விஷ்ணு விஷால் போன் பண்ணி நீங்க அந்த கேரக்டரா ரொம்ப நல்ல கேரி பண்ணி இருந்தீங்க அப்படின்னு சொன்னார்.


அந்த படத்துல நான் விக்கியோட திரைக்கதை பார்த்து ரொம்பவே ஆச்சரியப்பட்டேன். அதை நான் சரியா புரிஞ்சுக்கிட்டேனான்னு கூட எனக்கு தெரியாது. ஆனா அது அந்த அளவுக்கு ஸ்க்ரீன்ல வந்ததுன்னா அதுக்கு முக்கியமான காரணம் விக்னேஷ் சிவன். எனக்கு அது புரியாம நாலு நாளுக்குள் எனக்கு பாதுகாப்பற்ற பீல் வந்துவிட்டது. 


இன்னைக்கு வரைக்கும் நான் விக்கிக்கிட்டு சொல்லிகிட்டே இருப்பேன். நீ தான் நியூ ஏஜ் ஆப் சினிமா. 'காத்துவாக்குல இரண்டு காதல்' படத்தின் லைன் எடுத்து திரைக்கதை எழுத யாரும் யோசிச்சு கூட இருக்க மாட்டாங்க.


திரைக்கதை எழுதுவதை பொறுத்தவரையில் விக்கி எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல். நிறைய பேருக்கு அது புரியாது. 'நானும் ரவுடி தான்' படம் கூட நாலு ஹீரோ ரிஜெக்ட் பண்ண கதைதான். அவனை புரிஞ்சிகிட்டு கதைக்குள்ள போயிட்டா நிறைய மேஜிக் பண்ணுவான். இது தான் விக்னேஷ் சிவன் மூலம் எனக்கு கிடைச்ச அனுபவம் என்றார்