வங்கதேசம் - நெதர்லாந்து:


கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூன் 13) 27 வது லீக் போட்டி நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் குரூப் D யில் இடம்பெற்றுள்ள வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. 


டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கியது வங்கதேசம் அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தன்சித் ஹசன் மற்றும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ களம் இறங்கினார்கள்.


இதில் மூன்று பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற நஜ்முல் ஹொசைன் 1 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்து வந்த லிட்டன் தாஸ் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து நடையைக்கட்டினார். 23 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேசம் அணி.


160 ரன்களை இலக்காக நிர்ணயித்த வங்கதேச அணி:


ஆனால் பின்னர் வந்த ஷகிப் அல் ஹசன் தடுமாறிய வங்கதேச அணியை தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் மீட்டார். அதேபோல் மறுபுறம் 26 பந்துகள் களத்தில் நின்ற தன்சித் ஹசன் 35 ரன்களில் விக்கெட்டனார். இதனிடையே டவ்ஹித் ஹ்ரிடோய்  9 ரன்களிலும், மஹ்முதுல்லாஹ் 25 ரன்களிலும் விக்கெட்டை இழக்க கடைசி வரை களத்தில் நின்ற ஷகிப் அல் ஹசன் 46 பந்துகளில் 9 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 64 ரன்களை விளாசினார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 


நெதர்லாந்து அணி 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மைக்கேல் லெவிட் மற்றும் மேக்ஸ் ஓ'டவுட் களம் இறங்கினார்கள். 16 பந்துகள் களத்தில் நின்ற மைக்கேல் லெவிட் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 18 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தாக மேக்ஸ் ஓ'டவுட்டும் நடையைக்கட்டினார். பின்னர் விக்ரம்ஜித் சிங் சிங் களம் இறங்கினார். இவரும் 16 பந்துகள் மட்டுமே களத்தில் நின்றார்.


நெதர்லாந்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி:


அதேநேரம் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். மொத்தம் 26 ரன்கள் எடுத்த விக்ரம்ஜித் சிங் வங்கதேச பந்து வீச்சாளர் மஹ்முதுல்லாஹ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் வந்தார். 22 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் என மொத்தம் 33 ரன்கள் எடுத்தார்.


பின்னர் வந்த ஸ்காட் எட்வர்ட்ஸ் 25 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இவ்வாறாக நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு வங்கதேச அணி முன்னேறியுள்ளது.