நாள்: 14.06.2024 


கிழமை: வெள்ளி


நல்ல நேரம்:


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை


குளிகை:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


எமகண்டம்:


பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். மனதை உறுத்திய  சில கவலைகள் மறையும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கால்நடை வளர்ப்பு தொடர்பான விஷயங்களில் லாபம் மேம்படும். புதிய இடங்களுக்கு செல்வதற்கான சூழ்நிலை உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.


ரிஷபம்


ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஓய்வு நிறைந்த நாள்.


மிதுனம்


பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். சகோதரிகளிடம்  இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். உறவினர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளவும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றம் ஏற்படும். அனுகூலம் நிறைந்த நாள்.


கடகம்


மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். சுப காரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். முயற்சிக்கு ஏற்ப சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆசை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அலைச்சல் நிறைந்த நாள். 


சிம்மம்


சூழ்நிலை அறிந்து வாக்குறுதிகளை அளிக்கவும். அரசு காரியங்களில் சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நிதானமான செயல்பாடுகள் நன்மதிப்பை உண்டாக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உணவு சார்ந்த துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய இலக்குகள் பிறக்கும். வரவு நிறைந்த நாள்.   


கன்னி


தனவரவுகளில் இழுபறியான சூழ்நிலை அமையும். பயனற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாழ்க்கைத்துணை பற்றிய புரிதல் அதிகரிக்கும். சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கல்விப் பணிகளில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். வெற்றி நிறைந்த நாள்.


துலாம்


உடன்பிறந்தவர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்ப்பது நல்லது. உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். நன்மை நிறைந்த நாள். 


விருச்சிகம்:


கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். மனதளவில் எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். மனதளவில் தெளிவு பிறக்கும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். பகை விலகும் நாள்.


தனுசு


எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். தொழில் நிமித்தமான பயணங்கள் சாதகமாக அமையும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மனதில் தோன்றும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சில அனுபவங்களின் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். சகோதரர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். ஜெயம் நிறைந்த நாள். 


மகரம்


இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த பணிகள் சாதகமாக முடியும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மறதி நிறைந்த நாள்.


கும்பம்


மனதளவில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் குழப்பம் தோன்றும். பணிகளில் அனுகூலமற்ற சூழல் உண்டாகும். வியாபார பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். அனுபவம் கிடைக்கும் நாள்.


மீனம்


இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வதற்கான சூழ்நிலை ஏற்படும். புதிய நபர்களின் மூலம் வருமானம் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். தந்திரமான செயல்பாடுகளின் மூலம் எண்ணிய செயல்களை செய்து முடிப்பீர்கள். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு உண்டாகும். அசதி நிறைந்த நாள்.