தமிழ் சினிமாவில் வெர்சட்டைல் நடிகர் என்னும் அங்கீகாரத்தை குறைந்த காலத்திலேயே  பெற்றவர் விஜய் சேதுபதி. நடித்தால் ஹீரோதான் என்றில்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தால் என்ன , நடிப்பதற்கான ஸ்கோப் இருந்தால் பச்சை கொடி அசைத்துவிடுகிறார்.நடிப்பில் மட்டுமல்லாமல் திரைக்கு பின்னாலும் தனக்கென தனி பாணியை வைத்திருக்கு விஜய் சேதுபதி லாபம் படத்தில் விவசாயியாக நடித்திருந்தார். அந்த படத்தை பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கியிருந்தார்.


படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துக்கொண்டிருக்கும் பொழுது , உணவு சாப்பிட சென்றவர் அங்கேயே மயங்கிய நிலையில் , சுயநினைவின்றி இருந்திருக்கிறார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து மூளையில் ஏற்ப்பட்ட இரத்த கசிவிற்கு  தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் . ஆனால் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.  இந்நிலையில் இயக்குநர் ஜானாவிற்க்கும் தனக்குமான உறவு குறித்தும் தனக்கும் அவருக்குமான புகைப்பழக்கம் குறித்தும் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி.






 


அதில்" ஜனா சார்க்கிட்ட நான்தான் ரொம்ப கண்டிப்பா இருந்திருக்கேன். அவர் மறைவதற்கு முன்னால  புகைப்பிடிக்க கூடாதுனு ரொம்ப கண்டிப்பேன். ஆனால் நானும் தம் அடிப்பேன். அவருக்கு 2020 ல ரொம்ப உடம்பு சரியில்லை. அதன் பிறகு நான் ஷூட்டிங் ஸ்பாட்ல கூட அவரை தம் அடிக்காதீங்க, உடம்ப பார்த்துக்கோங்க , வாக்கிங் போங்க அப்படினு  போய் சொல்லியிருக்கேன். நான் வருத்தப்படுவேன்னு அவர் கம்மியா புகைப்பிடிச்சாருனு நம்புறேன்.


இப்படியெல்லாம் சொல்லிட்டி நான் ஓரமா போய் புகைப்பிடிச்சுட்டுதான் வருவேன். தம் அடிக்குற எல்லாருக்குமே அதை விட்டுறனும் , அது ஒரு சனியன்னு இருக்கும். ஆனால் விட முடியலை. ஜனா எப்போதுமே என்னிடம் சொல்லும் வார்த்தை அடுத்தடுத்த படிகளுக்கு போகனும், எனவே எடுத்து வைக்கும் ஸ்டெப்ஸை பாதுகாப்பாக எடுத்து வைக்கனும் சார்னுதான்.” என இயக்குநர் ஜனா குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.