நாள்: 21.03.2022


நல்ல நேரம் :


காலை 06.00 மணி முதல் காலை 07.00 மணி வரை


மாலை 04.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 09.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 07.30 மணி முதல் மாலை 08.30 மணி வரை


இராகு :


காலை 07.30 மணி முதல் மதியம் 9.00 மணி வரை


குளிகை :


மதியம் 01.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை


எமகண்டம் :


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


சூலம் – கிழக்கு பரிகாரம் - தயிர் 


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, நீண்ட நாட்களாக செயல்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். கலை சார்ந்த துறைகளில் மதிப்பு அதிகரிக்கும். பயணம் சார்ந்த செயல்பாடுகளின் மூலம் அனுபவம் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். 


ரிஷபம் :


ரிஷப ராசி நேயர்களே, எதிர்பாராத தனவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். தொழில் ரீதியான வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். 


 மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற்சிகள் மேம்படும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.


கடகம் :


கடக ராசி நேயர்களே, வீடு கட்டுவது தொடர்பான எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய முயற்சிகள் அதிகரிக்கும். 


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே,மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். தொழிலில் இருந்துவந்த போட்டிகள் விலகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் கிடைக்கும். பூர்வீக  சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, 


மனதிற்கு பிடித்த பொருட்களை நாட்களாக இருந்துவந்த பழைய வசூலாகும். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் குழப்பமும், தனம் தொடர்பான நெருக்கடிகளும் ஏற்படலாம். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, தள்ளிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த காரியங்கள் அலைச்சலுக்கு பின்பே நிறைவேறும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். கடந்த கால நினைவுகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்த மறைமுகமாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் மேம்படும். 


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, உயர்கல்வி தொடர்பான உதவி கிடைக்கப் பெறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதரவான சூழல் உண்டாகும். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். எந்தவொரு காரியத்தையும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் முடிப்பீர்கள்.


மகரம் :


மகர ராசி நேயர்களே, அரசு சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கால்நடைகளின் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும்.


கும்பம் :


கும்ப ராசி நேயர்களே, எண்ணிய பணிகள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவுபெறும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் நன்மை ஏற்படும். தந்தை வழியில் இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். 


மீனம்:


மீன ராசி நேயர்களே, உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்காலம் தொடர்பான மனக்குழப்பங்கள் உண்டாகும். புதிய ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது பற்றிய சிந்தனைகள் ஏற்படும். எந்தவொரு செயலிலும் உணர்ச்சி வேகம் இன்றி பொறுமையுடன் செயல்படவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண