மகாராஜா இயக்குநருக்கு BMW கார் வழங்கிய தயாரிப்பாளர்...
விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் 200 கோடி வசூலித்துள்ள நிலையில் படத்தின் இயக்குநர் நிதிலன் ஸ்வாமிநாதனுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர்

மகாராஜா
நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த ஜூன் மாதம் இந்திய திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா தமிழ் , தெலுங்கு , இந்தி என அனைத்து மொழிகளிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்தியாவைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் இப்படம் நீனாவில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே 120 கோடி படம் வசூலித்திருந்த நிலையில் தற்போது படத்தின் வசூல் 200 கோடியை நெருங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநருக்கு தயாரிப்பாளர் சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.
மகாராஜா இயக்குநருக்கு BMW கார்
கடந்த 2017ஆம் ஆண்டு பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த குரங்கு பொம்மை படம் வெளியானது. வெறும் 1 மணி நேரம் 40 நிமிடங்களே நீளம் கொண்ட இந்தப் படம் முதலில் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறியப்பட்டவர் நித்திலன் சுவாமிநாதன். இவர் முன்னதாக நாளைய இயக்குநர் மூன்றாவது சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். இதில் இறுதிச் சுற்றில் இவர் இயக்கிய “புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்” என்ற படம் நாளைய இயக்குநர் டைட்டில் பரிசை வென்றது.
Just In




தற்போது மகாராஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக கவனமீர்த்துள்ளார் நிதிலன் ஸ்வாமிநாதன். இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் அவருக்கு BMW கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
மேலும் படிக்க : இளையராஜாவுக்கு இது நல்ல பாடம்..விடுதலை 2 வசனத்தை மேற்கோள் காட்டும் நெட்டிசன்கள்
Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..கங்குவா பத்தி ஏன் பேசனும்?" சூடான் விஜய் சேதுபதி