- வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ் நாட்டில் இன்று நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- சென்னை மெட்ரோ ரயில்களில் ஆன்லைன் டிக்கெட் சர்வரில் கோளாறு, கவுண்டர்களில் டிக்கெட் பெறுமாறு பயணிகளுக்கு மெட்ரொ நிர்வாகம் அறிவுத்திய நிலையில் தற்போது அது சரி செய்யப்பட்டுள்ளது.
- தமிழக மீனவர்கள் பிரச்னையில் பிரதமர் மோடி இலங்கை அதிபரிடம் பேசியதற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு.
- டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என அரிட்டாப்பட்டி மக்கள் அறிவிப்பு
- இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 மீனவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வருகை
- ராமநாதபுரத்தில் உள்ள ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையை முன்னிட்டு, இன்று அதிகாலை கொடியேற்ற நிகழ்வு நடைப்பெற்றது.
- டிசம்பர் 14 ஆம் தேதி நடைப்பெற இருந்த உதவி வழக்கறிஞர் தேர்வுகள் ரத்து என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.
- திருச்சியில் 3 வயது சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய கொலுசு திருகாணி பத்திரமாக மீட்ட அரசு மருத்துவர்கள்.
- போச்சம்ப்பள்ளி அருகே இரும்புப்பட்டறையில் ஏற்பட்ட வெடி விபத்தால் ஒருவர் உயிரிழப்பு
- சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை அடுத்து பெரம்பூரில் நான்காவது ரயில் முனையம் அமைக்க தெற்கு ரயில்வே அனுமதி
- தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தால் தொடக்கப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிப்பு. மாநில திட்டக்குழு நடத்திய ஆய்வில் தகவல்.
- தென் மேற்கு வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது.
- விருதுநகரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து,ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் என தகவல்
Tamilnadu RoundUp: மீண்டும் வந்த ஆரஞ்சு அலார்ட்.. மீனவர்கள் விவகாரத்தில் பிரதமரை வரவேற்ற முதல்வர்
ஜேம்ஸ்
Updated at:
17 Dec 2024 10:06 AM (IST)
Tamilnadu Roundup 17th Dec 2024: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
10 மணி செய்திகள்
NEXT
PREV
Published at:
17 Dec 2024 09:59 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -