Vijaysethupathi Tweet: "6 யர்ஸ் அப் தர்மதுரை"...சந்தோஷத்தின் வெளிப்பாடாக ட்வீட் செய்த விஜய் சேதுபதி  

Continues below advertisement


ஸ்டூடியோ 9 ஆர்.கே. சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி - தமன்னா நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் " தர்மதுரை". சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தின் பெயரில் வந்த திரைப்படம் என்பதால் மக்கள் மனதில் எளிதில் பதிந்தது. சைடு ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த விஜய் சேதுபதியை "தென்மேற்கு பருவ காற்று" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது. 


நல்ல வசூல் ஈட்டிய திரைப்படம்:


"தர்மதுரை" திரைப்படத்தில் ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனித உணர்வுகளை மிகவும் வெளிப்படையாக  சித்தரித்த படம் இது. எதார்த்தமான திரைக்கதை என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. பாக்ஸ் ஆபிசில் பிளாக் பஸ்டர் திரைப்படமாக வெற்றிபெற்றது "தர்மதுரை" திரைப்படம். 



பக்கபலமாக இருந்த யுவன் இசை:


யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட். படத்தின் வெற்றிக்கு இசையும் ஒரு பக்கபலமாக அமைந்தது. இந்த படத்தின் "எந்த பக்கம் காணும் போதும்..." என்ற பாடலுக்காக பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு தேசிய விருது கிடைத்தது. விஜய் சேதுபதியின் திரைவாழ்வில் இந்த படம் நிச்சயம் ஒரு மைல் கல் என்றே சொல்ல வேண்டும்.


 






ட்வீட் செய்து சந்தோஷம் பரிமாற்றம்:


"தர்மதுரை" திரைப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் "6 யர்ஸ் அப் தர்மதுரை" என்ற தலைப்பில் ஒரு போஸ்ட் ட்வீட் செய்து தனது சந்தோஷத்தை பட குழுவினர்களோடு பகிர்ந்து கொண்டார். அது தற்போது லைக்ஸ்களையும் காமெண்ட்களையும் குவித்து வருகிறது. இப்படம் என்றுமே ஆல் டைம் ஃபேவரட் திரைப்படமாக இருக்கும்.   


 






மேலும் "தர்மதுரை" படத்தின் இரண்டம் பாகம் உருவாக்க உள்ளதாக சில தகவல்கள் பரிமாறப்பட்டன. ஆனால் அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை.