சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா , ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட  பல முன்னணி நடிகர்களில் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்மதுரை. இந்த படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் தயாரித்திருந்தார். சமீபத்தில் ட்விட்டர் வாயிலாக அவர் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும், அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

Continues below advertisement

Continues below advertisement

இதனால் குஷியான ரசிகர்கள் சீனு ராமசாமி , விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக கொண்டாடினர். ஆனால் இயக்குநர் சீனு ராமசாமி இது குறித்து திட்டவட்டமாக மறுப்பு  தெரிவித்திருந்தார். அதில் “தர்மதுரை பாகம் இரண்டு எடுக்கப்போவதாக செய்திகள் வருகின்றன.வாழ்த்துக்கள்.ஆனால் அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள் உண்மையல்ல.ஆகவே அது சம்பந்தமான விசயத்தில்  எனக்கு எவ்வித சம்பந்தம்  இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில்  என் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும்.” என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் படத்தில் யார் நடிக்க போகிறார்கள், யார் இயக்க போகிறார்கள் என தொடர்ந்து ஆர்.கே.சுரேஷிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் “ படத்தின் இயக்குநர் இன்னும் தேர்வாகவில்லை. சீனு ராமசாமியிடம் இரண்டாம் பாகம் குறித்து பேச்சுவாரத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம், அவர் பல படங்களை இயக்கி வருகிறார். அவரின் நேரம் கிடைத்தால் அவருடன் ஒப்பந்தம் செய்வோம் . அவர் மறுத்தால் மற்ற இயக்குநர்களை நாடும் திட்டமுள்ளது என்றார். மேலும் கதாநாயகனாக நடிக்க வைக்க விஜய் சேதுபதிதான் எங்களின் முதல் விருப்பம், ஆனால் அவர் பிஸியாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் மறுத்தால் நானே இப்படத்தில் நாயகனாக நடிப்பேன்” என விளக்கமளித்துள்ளார்.

ஆர்.கே.சுரேஷ்  தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தார தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்து பலரின் வரவேற்பை பெற்றார் ஆர்.கே.சுரேஷ் தற்போது பல இயக்குநர்களிடம் கதை கேட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறாராம். விரைவில் தர்மதுரை படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.