விஜய் டிவி பிக்பாஸ் களைக்கட்டிக் கொண்டிருக்கிறது. இன்று 3-வது ப்ரோமோவில், நேராவே சொல்லிடறேன். யார காப்பாத்துவாங்கன்னு எதிர்பாக்குறவங்கன்னு எதிர்பார்க்குறீங்க என்றார் கமல்ஹாசன். ஐக்கியதான் காப்பாத்திட்டாங்க போலருக்கு என்றார்.
நேற்றைய எபிசோட்: வரும்போது பீடிகையோடு வந்த கமல், நிறைய மாத்தி மாத்தி பேசுறாங்க. நீங்களே அவங்களுக்கு பதில் சொல்லிடுங்க என்றார். நாணயம் எடுப்பதற்கு தாமரைச்செல்வியையும், சின்னப்பொண்ணுவையும் வைத்து விளையாடியதைப் பற்றி கேள்வி கேட்டார் கமல். உங்களுக்காக யாருமே விளையாடவில்லையா என சர்காஸம் பண்ணார்? சர்க்கரை கொஞ்சம் கம்மியா செலவு பண்ணுங்க என அண்ணாச்சி சொன்னதும், சரக்கென ப்ரியங்காவும், அபிஷேக்கும் அவர்மீது பாய்ந்தார்கள். மெதுவா பேசு என சொன்ன ராஜுவையும் புரட்டி எடுத்தார் அபிஷேக். “நான் ரொம்ப சாதாரணமா சொன்னது உங்களைக் காயப்படுத்தி இருந்தா, மன்னிப்பு கேக்குறேன்” என சொன்னதும், எல்லோரும் அவரை சமாதானப்படுத்தினார்கள்.
தாமரையைக் காப்பாற்றி பஞ்சதந்திரம் கேமில் தியாகியாக பார்த்தீர்களா என எல்லாரையும் கமல் கேட்டதும், தியாகி ஆகணும்னா அதுக்கு தனி ஸ்ட்ராட்டஜி இருந்திருக்கும் என கமலுக்கே டஃப் கொடுத்தார் அபிஷேக். பாவம் அபிஷேக், தன் நிலைமை என்னவென தெரியாமல் வாயாடிக்கொண்டிருந்தார். "இங்க யாருமே வீக், ஸ்ட்ராங் கண்டென்ஸ்டென்ஸ் இல்ல. threat, Non threat தான் கேமே இருக்கு” என்றார். அப்படி சொல்றீங்களா? அப்படின்னா யார் அந்த ஜோன்ல இருக்காங்க எனக் கேட்டதும், “இப்போ குழந்தைங்களுக்கு டாச்க் வெச்சா இமான் அண்ணாச்சிதான் ஜெயிப்பாரு” என்றார். கமல், குழந்தைங்கன்னு சொன்னதால கேக்குறேன். குழந்தைங்களை கூட்டிட்டு வந்துட்டாங்கப்பா என சொன்னீர்களே என்றார். வழக்கம்போல அபிஷேக் சமாளித்தார். ராஜூ மோகனின் விளையாட்டை பாராட்டினார் கமல்.மதுவுக்கு ஸ்லிப் எழுதிக்கொடுத்த அக்ஷராவை நறுக்கென கேள்வி கேட்டார் கமல்ஹாசன். அதை விமர்சிக்க ப்ரியங்காவுக்கும் குறும்படம் போடாமலே குட்டு வைத்தார்.
சின்னப்பொண்ணுவை உடலைத்தடவி சோதனை செய்தது உங்களுக்கு சங்கடமாக இல்லையா என ப்ரியங்காவைக் கேள்வி கேட்டார் கமல். அதற்கு விளையாட்டுதானே, எல்லாரையும் கேட்டுவிட்டுத்தான் செய்தேன் என சப்பைக்கட்டு கட்டினார். ”கனடாவில் தான் சோதிக்கப்பட்டதாக சொன்ன கமல், பெயரும் தனக்கு வித்தியாசமாக இருந்து, தாடியும் வைத்திருந்ததால் தன்னை வேறு விதமாக சோதனை செய்தார்கள்” என்றார்.
”என் படத்திலேயே காட்சிகள் வைத்திருப்பதால், அது எனக்கு நன்றாக தெரியும். இந்த சோதனைகள் காயப்படுத்தும்” என்றார்.