Amala Paul : எனக்கு ஃபேவரைட் இவர்தான்.. இவரைத்தான் எனக்கு பிடிக்கும்.. சர்ப்ரைஸ் கொடுத்த அமலா பால்

Amala Paul : பிடித்த ஆக்டர் என்றால் விஜய் சேதுபதி எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு படத்திலும் அவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என்னை இன்ஸ்பையர் பண்ணிவிட்டார்.

Continues below advertisement

விஜய் சேதுபதி என்னை இன்ஸ்பையர் பண்ணிவிட்டார் - அமலாபால்   

Continues below advertisement

நீண்ட இடைவேளைக்கு பிறகு "கடாவர்" ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை அமலாபால். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். பல போராட்டங்களுக்கு பின்னர் இப்போது தான் இந்த படம் வெளிவருகிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் "கடாவர்" திரைப்படத்தை ஐந்து மொழிகளில் வெளியிட சம்மதித்து ஆகஸ்ட் 12ம் தேதி ஓ.டி.டியில் வெளியிடுகிறது. மறுபுறம் அமலாபால் நடிப்பில் அதோ அந்த பறவை போல திரைப்படம் ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாக தயாராக இருக்கிறது. சில காரணங்களால் இப்படமும் தாமதமாகி கொண்டே போனது. தற்போது தான் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்ததால் படம் இந்த மாதா இறுதியில் வெளியாகிறது. தொடர்ச்சியாக இந்த மாதம் அமலாபால் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாவது அவரின் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை அதிகரித்துள்ளது. 

அமலாபால் ஃபேவரட் ஆக்டர் : 

அமலாபால் சமீபத்தில் ஒரு பேட்டியில் பங்கேற்றார். அப்போது உங்களுக்கு பிடித்த ஃபேவரட் ஹீரோ யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அமலாபால் ஃபேவரட் ஆக்டர் என்றால் அதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. பிடித்த ஆக்டர் யார் என்றால் விஜய் சேதுபதி எனக்கு  ரொம்ப பிடிக்கும். ஒவ்வொரு படத்திலும் அவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஹீரோ என்றால் அவர் இப்படி தான் இருக்க வேண்டும், இது போன்ற கதாபாத்திரம் தான் நடிக்க வேண்டும், பிஸிக்கலா இப்படி இருக்க வேண்டும் எனும் வரைமுறையை தகர்கிறார். அவர் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கை, தன்னம்பிக்கை இது எல்லாம் என்னை பிரமிக்க வைக்கிறது. எனக்கு பிடித்த மாதிரி தான் பண்ணுவேன் என்ற தைரியம் அவருக்கு இருப்பது என்னை மிகவும் கவர்கிறது. அந்த தைரியத்திற்கு ஹேட்ஸ் ஆப் சொல்லவேண்டும் என்று விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிவிட்டார் அமலாபால்.  

அவர் தனது ஃபேவரட் ஆக்டர் பற்றி கூறிய வீடியோ கிளிப்பிங் இதோ உங்களுக்காக...

Continues below advertisement
Sponsored Links by Taboola