நாள்: 10.08.2022


நல்ல நேரம் :


காலை 9.15  மணி முதல் காலை 10.15  மணி வரை


மாலை 1.45 மணி முதல் மாலை 2.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு :


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


குளிகை :


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


எமகண்டம் :


காலை 7.30 மணி முதல் மாலை 09.00 மணி வரை


சூலம் –வடக்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, இன்று  உங்கள் ஆசைகள் எளிதில் நிறைவேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்கள் காணப்படும். உங்கள் செயல் திறன் மேம்படும். பணியில் நல்ல அங்கீகாரம் பெறுவீர்கள்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, இன்று உங்கள் செயல்களை பொறுமையுடன் கவனமாக கையாள வேண்டும்.பிரார்த்தனை மற்றும் இறை மந்திரங்கள் மூலம் நன்மை விளைவதைக் காண்பீர்கள். பணியிடத்தில் உற்சாகமான நிலை காணப்படாது. பணிகள் கடுமையாக இருக்கும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, இன்று இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புத்துணர்ச்சி பெறுவீர்கள். இதன் மூலம் உங்கள் தொடர்புகள் அதிகரிக்கும். பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. சாதகமான பலன்கள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.


கடகம் :


கடக ராசி நேயர்களே, இன்று எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். மனம் திறந்து அந்த வாய்ப்புகளை எற்றுக் கொள்ளுங்கள்.நிதி ஏற்றத் தாழ்வு உங்களுக்கு கவலையை உண்டாக்கும். பண இழப்பு ஏற்படாமல் இருக்க நீங்கள் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, இன்று சில மாறுதல்கள் ஏற்படும். பொறுமையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். நிதி நிலைமை மகிழ்சிகரமாக இருக்காது. இன்று அதிக செலவுகளை சந்திக்க நேரும்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, இன்று  சிறந்த பலன்கள் விளையும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் வளர்ச்சியும் உங்கள வாழ்வில் நன்மையும் விளையும். நிதி வளர்ச்சி அபாரமாக இருக்கும். நிதியில் ஸ்திரத்தன்மை காணப்படும்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் சாதகமான பலன் கிடைக்கும். இதனை உண்மையாக நீங்கள் முயற்சி எடுக்கலாம். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். ஆன்மீக ஈடுபாடு நன்மை அளிக்கும். உங்கள் குடும்பத்திற்காக அதிக பணம் செலவு செய்வீர்கள். இதனால் சேமிப்பிற்கான வாய்ப்பு குறையும்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, இன்று பணிகளைக் கையாளும்போது கவனக்குறைவு ஏற்படும். சக பணியாளர்களுடன் மோதுவதை தவிர்க்கவும். நிதி வளர்ச்சி மகிழ்சிகரமாக இருக்காது. பெரிய முதலீடுகள் தவிர்ப்பது நல்லது. சேமிப்பதற்கான வாய்ப்பு குறைவு.


மகரம் :


மகர ராசி நேயர்களே,  நீங்கள் அமைதியாக இருக்க கேளிக்கை நிகழ்ச்சி களைக் கண்டு மகிழுங்கள். உங்கள் அன்றாட செயல்களில் கவனம் செலுத்துங்கள். இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. குடும்ப பொறுப்புகள் காரணமாக கூடுதல் செலவுகள் ஏற்படும்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, இன்று உற்சாகமான மாறுதல்களைக் காண்பீர்கள். இனிமையான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும். உங்கள் நம்பிக்கை மற்றும் தரம் உயரும்.


மீனம்:


மீன ராசி நேயர்களே, இன்று உங்கள் இலக்குகளை அடைவதற்கு நீங்கள் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும். பணி மாற்றம் அல்லது இட மாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் தற்போதைய பணியில் உங்களுக்கு திருப்தி காணப்படாது. நிதி நிலைமை எதிர்பார்த்த அளவிற்கு காணப்படாது. பண இழப்பு ஏற்படாமல் இருக்க பணத்தை சாதுர்யமாக கையாளவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண