பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியைத் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். இன்றுடன் பிக்பாஸ் தமிழ் 50 ஆவது நாளை நிறைவு செய்து முதல் பாதியை முடிவு செய்துள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் நடந்த குறிப்பிடத் தகுந்த நிகழ்வுகளை சுருக்கமாக இங்கு பார்க்கலாம்

Continues below advertisement


அக்டோபர் 5 பிக்பாஸ் துவக்கம்


பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் கோலாகலமாக துவங்கியது. வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் , அரோரா சிங்க்ளேர் , விஜே பார்வதி , கெமி , பிரவீன் காந்தி , எஃப்.ஜே , பிரவீன் , அப்சரா சிஜே , கலையரசன் , ரம்யா ஜோ , கனி திரு , நந்தினி , ஆதிரை , துஷார் , சபரி , கானா வினோத் , வியானா , சுபிக்‌ஷா , விக்கல்ஸ் விக்ரம் , கமருதின் ஆகிய 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் அடியெடுத்து வைத்தனர்.


முதலில் வெளியேறிய நந்தினி 


முதல் வார எவிக்‌ஷனுக்கு முன்பாகவே 5 ஆவது நாளில் நந்தினி  தனிப்பட்ட பிரச்சனைகளால் பிக்பாஸ் வீட்டில் இருந்து முதலாவது ஆளாக வெளியேறினார். அவரைத் தொடர்ந்து திரைப்பட இயக்குநர் பிரவீன் காந்தி முதல் வார எவிக்‌ஷனின் வெளியேறினார். 


முதல் வாரத்தில் வாட்டர்மெலன் ஸ்டார் மற்றும் பிரவீன் இடையில் குரட்டை விட்டதாக் வாக்குவாதம் ஏற்பட்டது. 


இரண்டாவது வார எவிக்‌ஷன்


இரண்டாவது வார எவிக்‌ஷனின் அப்சரா சி.ஜே வெளியேறினார். திருநங்கையான அப்சரா சிஜே பல்வேறு சவால்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களுடன் உரையாடாமல் தனியாகவே இருந்து வந்தார். இதனால் அவருக்கு மிக குறைவான வாக்குகளை ரசிகர்கள் அளித்தனர். 


வாட்டர்மெல்ன் ஸ்டார் மற்றும் விஜே பார்வதி இடையில் நல்ல நட்பு ஏற்பட்டது. எல்லா பிரச்சனைகளிலும் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருந்தது ரசிகர்களை கவர்ந்தது. பார்வதி அழுது புலம்ப வாட்டர்மெலஸ் ஸ்டார் அருகில் உட்கார்ந்து ஆப்பிள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் வீடியோ மீமாக வைரலானது. மறுபக்கம் வாட்டர்மெலஸ் ஸ்டார் மற்றும் கமருதின் இடையே மோதல் வலுக்க கமருதின் தகாத வார்த்தைகளால் திவாகரை தொடர்ச்சியாக திட்டி வந்தார் 


மூன்றாவது வார எவிக்‌ஷன் 


மூன்றாவது வாரத்தில் ஆதிரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். ஆனால் தன்னை எவிக்ட் செய்தது ரசிகர்களின் தவறான முடிவு என்று தான் உள்ளே இருக்க தகுதியான ஆள் என்று ஆதிரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியபோது கூறினார். 


அரோரா மற்றும் துஷார் இடையில் காதல் கிசுகிசுக்கள் தொடங்கின. இருவரும் இரட்டை அர்த்தத்தில் பேசிக்கொண்டது நிறைய விமர்சனத்திற்கு உள்ளானது. அதேபோல் பார்வதி மற்றும் கமருதின் இரட்டை அர்த்தத்தில் பேசிக்கொண்டதும் விமர்சனத்திற்குள்ளானது. 


வைல்டு கார்டு என்ட்ரி


நான்காவது வார தொடக்கத்தில் வைல்டு கார்டு சுற்றில் பிரஜின் , சாண்ட்ரா , திவ்ய கணேஷ் , அமித் பார்கவ் ஆகிய நால்வர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் 


நான்காவது வார எவிக்‌ஷன்


நான்காவது வாரத்தில் கலையரசன் வெளியேறினார். அகோரி கலையரசன் என சமூக வலைதளத்தில் பரவலாக அறியப்படுபவர் . இந்த சீசனில் அவர் போட்டியாளராக கலந்துகொண்டது குறித்து பல கேள்விகள் இருந்தன. ஆனால் பாசிட்டிவாகவும் நெகட்டிவாகவும் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் கலையரசன் வெளியேறினார். 


போட்டியாளர்களின் நடத்தை  குறித்து விஜய் சேதுபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். 


ஐந்தாவது வார எவிக்‌ஷன் 


ஐந்தாவது வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டபுள் எவிக்‌ஷன் நடந்து போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதில் துஷார் மற்றும் பிரவீன் ஆகிய இருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். 


ஆறாவது வார எவிக்‌ஷன் 


இந்த பிக்பாஸ் சீசனில் அதிகம் பேசப்பட்ட போட்டியாளர் வாட்டர்மெலன் ஸ்டார் ஆறாவது வாரத்தில் எவிக்‌ட் செய்யப்பட்டார். மற்ற போட்டியாளர்களிடம் திவாகர் பேசும் விதம் மற்றும் பெண்களிடம் நடந்துகொள்ளும் விதம் பரவலாக விமர்சனத்திற்கு உள்ளானது. கொடுத்த டாஸ்க்கை முடிக்காமல் ரீல்ஸ் பதிவிடுவதில் கவனம் செலுத்தியதற்காக விஜய் சேதுபதி கடுமையாக விமர்சித்து திவாகரை எலிமினேட் செய்தார்


ஏழாவது வார எவிக்‌ஷன் 


ஏழாவது வாரத்தில் கெமி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். விமர்சனங்கள் இருந்தாலும் இந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டார் கெமி. 


பிரஜின் மற்றும் விஜய் சேதுபதி இடையே வாக்குவாதம் முற்றியது. கோபபட்ட விஜய் சேதுபதி நாற்காலியை தூக்கி எறிந்து நிகழ்ச்சியை விட்டு சென்றார்.