பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா இன்று தனது இல்லத்தில் காலமானார். 89 வயதான தர்மேந்திரா கடந்த சில ஆண்டுகளாக உடல் நல குறைவால் மருத்துவமையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். அண்மையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் இன்று தனது இல்லத்தில் காலமானார். இந்தி திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
தர்மேந்திரா திரை வாழ்க்கை
1935 டிசம்பர் 8 அன்று பஞ்சாபில் பிறந்த தர்மேந்திரா, இந்திய திரையுலகில் கடந்த 65 ஆண்டுகளாகத் தொடர்ந்து நம்பிக்கையூட்டும் நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். தொடர்ந்து வணிக ரீதியில் வெற்றி பெற்ற படங்களை வழங்கியதற்காகவே அவர் ரசிகர்களிடத்தில் “பாலிவுட்டின் ஹீ-மேன்” என்ற பட்டத்தைப் பெற்றார். இந்தி சினிமாவில் அதிக வெற்றிப் படங்களில் நடித்த நடிகர் என்ற சாதனையும் அவருக்கே சொந்தம்.
சினிமாவை அடைவது என்ற கனவுடன் பஞ்சாபில் இருந்து மும்பைக்கு வந்த அவர், 1960 ஆம் ஆண்டு அர்ஜுன் ஹிங்கோரானியின் 'தில் பி தேரா ஹம் பி தேரே' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், 1961 இல் வெளியான ஷோலா அவுர் ஷப்னம் அவரை பரவலாக அறிமுகப்படுத்தியது. நடிகராக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார். இந்திய சினிமாவின் எல்லாக் காலங்களிலும் பிரபலமான படங்களில் ஒன்றான ஷோலே படம் இன்று வரை பலரின் மனதில் இடம்பிடித்து உள்ளது. மேலும், சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் தன்னுடைய தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
பிற மொழியில் பங்களிப்பு
இந்தி மட்டுமல்லாமல் வங்கம் மற்றும் பஞ்சாபி திரைப்படங்களிலும் தர்மேந்திரா நடித்துள்ளார். அவரது திரையுலக பங்களிப்பை பாராட்டி 2013ஆம் ஆண்டு மத்திய அரசு 'பத்மபூஷன்' விருது வழங்கி கௌரவித்தது.
இறுதியாக நடித்த படம்
தர்மேந்திரா கடைசியாக இக்கிஸ் என்ற பாலிவுட் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி வெளியாக இருக்கிறது.
வாரிசுகள்
தர்மேந்திராவுக்கு இரண்டு மனைவிகள் உள்ளன. முதல் மனைவி பிரகாஷ் கெளல் மற்றும் தர்மேந்திராவுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர் சன்னி தியோல் , பாபி தியோ , விஜிதா தியோ , அஜீதா தியோல் . முதல் மனைவியுடன் திருமண உறவில் இருந்தபோதே தர்மேந்திரா பிரபல பாலிவுட் நடிகை ஹேமா மாலினியை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஈஷா தியோல் மற்றும் ஆஹானா தியோல் ஆகிய இரு குழந்தைகள் உள்ளன.