நடிகர் துல்கர் சல்மான் இயக்கியுள்ள சீதாராமம்(Sita Ramam) படம் முதல் நாளில் 8.9 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இயக்குநர் ஹனு ராகவ்புடி இயக்கத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “சீதாராமம்”. தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம்  இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படம் நிச்சயம் அனைவரையும் கவரும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


கதையின் கரு: 


காஷ்மீரில் நடக்கும் ஒரு மதக்கலவரத்தில் இளவரசி நூர் ஜஹானை (மிருணாள் தாகூர்), ராணவ வீரர் ராமன் ( துல்கர் சல்மான்) காப்பாற்றுகிறார். இதனையடுத்து துல்கரின் மீது காதல் கொள்ளும் நூர் ஜஹான், அவருக்கு யாருமில்லை என்பதை அறிந்து கொண்டு, காதல் கடிதங்களை எழுதுகிறார்.


ஒருக்கட்டத்தில் இருவரும் சந்தித்து காதல் வளர்த்து வர, திடீரென்று வரும் போர் பணிக்காக கிளம்புகிறார் துல்கர் சல்மான். இறுதியில் அவர் மீண்டும் நாடு திரும்பினாரா..? அவரின் காதல் என்னவானது..? அங்கு அவரது காதலிக்காக எழுதிய கடிதத்தின் நிலை என்ன ? அதற்கும் அஃப்ரீனாவிற்கும் (ராஷ்மிகா) என்ன தொடர்பு..? உள்ளிட்ட கேள்விகளுக்கான விடைதான் சீதா ராமம் படத்தின் கதை.   










சொன்னதுபோலவே படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  பலரும் சீதாராமம் படம் திரையரங்குகளில் கூட்டத்துடன் கொண்டாடப்பட வேண்டும் என்றும், சீதாராமம் ஒரு காவியக் காதல் போல் காட்சியளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர். இப்படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூ.20 லட்சமும், 2வது நாளில் ரூ.80 லட்சமும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல இந்திய அளவில் இப்படம் ரூ.8.90 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் படம் பிளாக்பஸ்டர் வசூல் சாதனை படைத்துள்ளதாக ரசிகர்கள் சீதாராமம் படத்தை கொண்டாடி வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண