விடுதலை 2:
வெற்றிகளின் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை பார்ட் 1 கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட விடுதலை படத்தின் 2ஆம் பாகம் 20ஆம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் வெளியான விடுதலை 2 படத்திற்கு, ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். பெருமாள் வாத்தியார் போலீசில் சிக்கியதைத் தொடர்ந்து அவரது வாழ்க்கை இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. எப்படி ஒரு கம்யூனிச இயக்கத்திற்கு தலைவராக வாத்தியார் மாறுகிறார் என்பதை விடுதலை பார்ட் 2 சித்தரிக்கிறது.
சூரி & விஜய் சேதுபதி
முதல் பாகத்தில் சூரி தான் ஹீரோ என்றாலும், இரண்டாவது பாகம் முழுவதும் விஜய் சேதுபதியின் காட்சிகள் ஆக்கிரமித்துள்ளதால், விஜய் சேதுபதி தான் ஹீரோவாக ரசிகர்கள் கண்களுக்கு தெரிகிறார். அதே போல் வெற்றிமாறனின் முந்தைய படங்களுடன் ஒப்பிடும் போது வெற்றிமாறன் இயக்கத்தில் இப்போது வெளியாகியுள்ள 'விடுதலை 2' படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, மஞ்சு வாரியர் நடிக்க, சூரி, பவானி ஸ்ரீ, சேத்தன், அட்டகத்தி தினேஷ், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். படம் வெளியாகி 4 நாட்கள் கடந்த நிலையில் ரூ.25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுத்திகிறது. விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் 4 நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் 1 மணிநேர காட்சி:
இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாக படத்தின் 8 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்ட நிலையில் ஓடிடிக்காக கூடுதலாக 1 மணி நேரம் சேர்க்கப்பட்டு படம் வெளியாக இருக்கிறது என கூறப்படுகிறது. விடுதலை பார்ட் 2 விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆவது வாரத்திலோ அல்லது 3ஆவது வாரத்திலோ ஓடிடியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.