ஸ்ரீலங்காவை சேர்ந்த சங்கீதா -நடிகர் விஜய் ஆகியோர் இருவீட்டாரின் சம்மதத்துடன் 1999 -ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு ஜாசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கின்றனர். இன்று இவரின் திருமண நாளையொட்டி திரை பிரபலங்களும், ரசிகர்களும் விஜய்-சங்கீதா ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் சங்கீதா திருமணம் குறித்து விஜயின் தாய் ஷோபா பேட்டி ஒன்றில் தெரிவித்ததாவது :”சங்கீதா ஒரு முறை நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது சகோதரியுடன் எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்போது எனக்கும் எனது கணவருக்கும் சங்கீதாவை பிடித்துப்போனதால் இது குறித்து விஜயிடம் பேசினோம். இருவரும் திருமணத்திற்கு விருப்பம் தெரிவித்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் விஜய்- சங்கீதா திருமணம் நடைபெற்றது” இவ்வாறு ஷோபா தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் தற்போது அதிக அளவில் ரசிகர்களை கொண்டு உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘லியோ’ திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “விஜய்யின் கேரியரில் ‘லியோ’ முக்கியமான படமாக இருக்கும். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் இன்டர்வல் ப்ளாக் பார்க்கும்போது எங்களுக்கே கூஸ்பம்ப்ஸாக இருந்தது. இடைவேளை காட்சியை பொறுத்தவரை 8 நிமிடம் வரும். நிச்சயம் ரசிகர்கள் திரையரங்குகளில் ஆர்ப்பரிப்பார்கள்” என தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் சூப்பர்ஸ்டார் சர்ச்சை இப்போது தான் சற்று ஓய்ந்துள்ளது. ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவிற்கு பின் விஜய் ரசிகர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே இணையத்தில் வார்த்தை போர் நிலவி வந்தது. இப்போது இந்த சர்ச்சைகள் எல்லாம் மெதுவாக ஓய்ந்து வருகிறது. இந்நிலையில், விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேச போகிறார்? என்ற எதிர்பார்ப்புடனும், படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க