டிவிஎஸ் நிறுவனம் ஸ்போர்ட்ஸ் லுக்கில் வடிவமைத்துள்ள தனது புதிய எக்ஸ் மின்சார ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய ஸ்கூட்டர் அறிமுகம்:
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டிவிஎஸ் நிறுவனம் தனது புதிய மின்சார ஸ்கூட்டரான, எக்ஸ் மின்சார ஸ்கூட்டரை துபாயில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. பிரீமியம் பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த வாகனம், பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன், புதுப்புது தொழில்நுட்ப அம்சங்களையும் கொண்டுள்ளது. அதோடு, ஸ்போர்ட்ஸ் லுக்கில் வடிவமைக்கப்பட்டு இருப்பது, வாடிக்கையாளர்கள் இடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
விலை விவரம்:
டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய எக்ஸ் மின்சார ஸ்கூட்டரின் விலை இந்திய சந்தையில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 900 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்திற்கான முன்பதிவு டிவிஎஸ் நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் தொடங்கியுள்ளது. இதற்கான கட்டணமாக ரூ.5000 வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு முன்பதிவு செய்யப்பட்ட இந்த வாகனம் வரும் நவம்பர் மாதம் முதல் விநியோகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
வடிவமைப்பு - டிஜிட்டல் அம்சங்கள்:
எக்ஸ் மின்சார ஸ்கூட்டர் டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய XLETON பிளாட்பார்மில், மேக்ஸி -ஸ்டைல் ஃபார்மெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பிற்கு அலுமினியம் அலாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிறந்த ஏரோடைனமிக் திறன் மற்றும் ரேம் ஏர் கூலிங் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. Nav Pro எனப்படும் புதிய நேவிகேஷன் தொழில்நுட்பமும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் 10.25 இன்ச் அளவில் மிகப்பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரைப் பெறும் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் இது தான்.
கூடுதல் அம்சங்கள்:
ஸ்கூட்டரின் பின்புறம் மற்றும் ஆட்டோ ஹோல்ட் ஃபங்ஷனிலும் மிகவும் ஸ்போர்ட்டியாக தோற்றமளிக்கிறது. ஆஃப்செட் மோனோ சஸ்பென்ஷனும் இடம்பெற்றுள்ளது. 220mm முன்புற டிஸ்க், பின்புறத்தில் 195mm டிஸ்க் பிரேக் மற்றும் சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. Xthealth, Xtride மற்றும் Xonic ஆகிய மூன்று tஇரைவ் மோட்களை கொண்டுள்ளது. அதில், Xonic மிகவும் சக்திவாய்ந்த டிரைவ் முறையாக உள்லது. இது ஏபிஎஸ் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோலையும் பெறுகிறது. ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டு உள்ளன.
பேட்டரி விவரங்கள்:
இதில் இடம்பெற்றுள்ள 4.44 கிலோவாட் ஹவர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 140 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இதில் உள்ள மோட்டார்கள் அதிகபட்சம் 11 கிலோவாட் வரையிலான திறன் கொண்டிருக்கின்றன. இந்த மின்சார ஸ்கூட்டர் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 2.6 நொடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 105 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். 0 முதல் 50 சதவிகிதம் எனும் அளவ்ற்கு பேட்டரியை வெறும் 1 மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும்.
Car loan Information:
Calculate Car Loan EMI