The Goat : உண்மையான தி கோட் திருவிழா தெலுங்கு ரசிகர்களுக்கு தான்...அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சியா?

விஜயின் தி கோட் திரைப்படத்திற்கு தெலங்கானா மாநிலத்தில் அதிகாலை நான்கு மணி சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி இன்று வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது

Continues below advertisement

தி கோட்

விஜயின் தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது. உலகளவில் 5000 திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. கடந்த சில நாட்கள் முன்பிருந்து படத்திற்கான முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் தி கோட் படத்திற்கான முன்பதிவுகளின் வசூல் 6 கோடியை எட்டியுள்ளது. அதேநேரம் கேரளா மற்றும் கர்னாடகாவின் 3 கோடி வசூல் ஆகியுள்ளது. வெளிநாடுகளில் இதுவரை 11 கோடிக்கு முன்பதிவுகளின் வழியாக வசூல் சேர்ந்துள்ளது. முதல் நாளுக்கான முன்பதிவுகளில்  மட்டுமே தி கோட் படம் உலகளவில் 25 கோடி வசூலித்துள்ளது படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் மேலும் சில காட்சிகளை திரையரங்குகள் அதிகரிக்க திட்டமிட்டு வருகிறார்கள். 

Continues below advertisement

ALSO READ | The Goat : ராயன் பட வசூலை இரண்டே நாளில் அடிக்கும்.. பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கப்போகும் விஜய்

தெலங்கானாவில் தி கோட் படத்திற்கு  சிறப்பு காட்சிகள்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி கோட் படத்தின் முதல் காட்சி அதிகாலை 9 மணி முதல் தொடங்குகின்றன. கேரளாவில் அதிகாலை நான்கு மணிக்கு தி கோட் திரையிடல் தொடங்க இருக்கிறது. தற்போது ரசிகர்களின் வலியுறுத்தலால் தெலங்கானா மாநிலத்திலும் தி கோட் படத்திற்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட இருக்கின்றன. 

தி கோட் படத்தின் ஆந்திரா மற்றும் தெலங்கானா வெளியிட்டு உரிமத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெற்றுள்ளது. நேற்று ஹைதராபாதில் தி கோட் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  பேசிய தயாரிப்பாளர் சசிதர் ரெட்டி விஜய் ரசிகர்களுக்காக தி கோட் படத்திற்கு அதிகாலை நான்கு மணி சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒரு தமிழ் நடிகரின் படத்திற்கு தெலுங்கு பேசும் மாநிலங்களில் அதிகாலை நான்கு மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்படுவது அனேகமாக இதுவே முதல் முறை என்று சொல்லலாம். தமிழகத்தில் சிறப்பு காட்சிகளை பார்க்க முடியாத விஜய் ரசிகர்கள் இதற்காகவே கேரளா மற்றும் ஆந்திராவுக்கு கிளம்பிச் சென்று வருகிறார்கள்.


மேலும் படிக்க : Ajith - Vijay: அஜித்தால் எமோஷன கட்டுப்படுத்த முடியாது; ஆனால் விஜய் அப்படி இல்லை - வெங்கட் பிரபு

Continues below advertisement
Sponsored Links by Taboola