விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் படப்பிடிப்பு அடுத்து ரஷ்யாவில் நடைபெறவுள்ளதாகவும், இதற்காக படக்குழு ரஷ்யா பறக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘ பீஸ்ட்’ இந்த படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.  விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே  ஒப்பந்தமாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. பீஸ்ட் படத்தில் அடுத்தடுத்த அப்டேட்டிற்காக விஜய் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். 




பீஸ்ட் படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில் ,கொரோனா இரண்டாம் அலை காரணமாக அடுத்தடுத்த படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் அரசு அறிவித்த அறிவிப்புகளை பின்பற்றி இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் ,  மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈசிஆர் பகுதிகளில் நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. 


தோழி குடும்பத்தினரிடம் பேசினேன்.. மருத்துவமனை புகைப்படம் வெளியிட்ட பின்பு மனம்திறந்த யாஷிகா..


இந்நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு விரைவில்  முடிவடைய உள்ளதாகவும், அடுத்து படப்பிடிப்புக்காக பீஸ்ட் படக்குழு ரஷ்யா பறக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஒரு பாடல் மற்றும்  சில காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக  படக்குழுவிற்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகி வரும் இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக   கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும்  குறிப்பிடத்தக்கது.  படத்தில் ஒயிட் காலர் வில்லனாக செல்வராகவன் நடிப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் இது குறித்த தெளிவான விவரங்கள் அடுத்தடுத்த அப்டேட் மூலமாகத்தான் தெரிய வரும் . 





இதற்கிடையே வலிமை படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்ட சூழலில்  தற்போது பைக் சேசிங் காட்சி ஒன்றிக்காக ரஷ்யா செல்ல உள்ளனர் படக்குழு.  இதுவே வலிமை படத்தின் இறுதி காட்சிகளாக இருக்கும் அந்த காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டவுடன் உடனடியாக அஜித்தின் 61 வது படத்தின் வேலைகள் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. 


மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட வலிமை படமானது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டங்களாக தடைப்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராமல் இருந்தது.  இந்நிலையில் கடந்த மாதம் வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் வெளியாகின. அது தவிற படத்தில் “வேற மாறி “ லிரிக்கல் வீடியோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படியாக, தல அஜித்தும், தளபதி விஜய்யும் தங்களது அடுத்த கட்ட ஷூட்டிங்கிறாக ரஷ்யா செல்லவுள்ளனர். 


"எனக்கு மட்டும் சக்தியிருந்தால் அப்பாவை பழையபடி மாற்றுவேன்": கண்ணீர் சிந்திய நயன்தாரா