Continues below advertisement

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவர் விஜய் மில்டன். ஓவர் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநரானவர். ஆட்டோகிராப், காதல், போஸ், சாமுராய், வழக்கு எண் 18/9 உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். 'அழகாய் இருகிறாய் பயமாய் இருக்கிறது' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்தார். அதை தொடர்ந்து அவர் இயக்கிய 'கோலி சோடா' படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அப்படம் மூலம் கவனம் பெற்ற விஜய் மில்டன் அடுத்தடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்பு எழுந்தது.   

 

Continues below advertisement

 

கோலி சோடா படத்தின் வெற்றி அதன் அடுத்த சீக்வெல்லை எடுக்க தூண்டியது. அந்த வகையில் 2018ம் ஆண்டு ரஃப்நோட் புரொடக்‌ஷனின் நிறுவனத்தின் கீழ் அவரது சகோதரர் பரத் சீனி தயாரிப்பில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், பரத் சீனி, சுபிக்ஷா, வினோத், எசக்கி பரத், க்ரிஷா குருப், ரக்ஷிதா, செம்பன் வினோத் ஜோஸ், சரவண சுப்பையா மற்றும் ஸ்டன் சிவா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியானது. 

 

 

இந்நிலையில் கோலி சோடா பார்ட் 3 குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதற்கு 'கோலி சோடா ரைசிங்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இது பார்ட் 1 படத்தின் சீக்வெல் மற்றும் பார்ட் 2 படத்தின் ப்ரீக்வெல் படமாக உருவாகியுள்ளது. சேரன், ஷாம், புகழ், அவந்திகா, அம்மு, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கூடிய விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

 

சமீபத்தில் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ்,  பிரியா பவானி ஷங்கர், தலைவாசல் விஜய்,சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் ரமணா, ஏ.எல்.அழகப்பன், சத்யராஜ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் ஆக்ஷன் ஜானரில் வெளியான படம்  "மழை பிடிக்காத மனிதன்". இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.