மீண்டும் சேர்கிறது மாஸ்டர் கூட்டணி... தயாரிப்பாளர் யார் தெரியுமா?

விஜய்யை வைத்து அவர் இயக்கிய மாஸ்டர் படமும் ஹிட் அடித்ததால் தமிழின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரானார் லோகேஷ்.

Continues below advertisement

மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அந்தப் படம் அனைவரிடத்திலும் பரவலான பாராட்டை பெற்றது. இதனையடுத்து அவர் கைதி படத்தை இயக்கினார். மன்சூர் அலிகானை மனதில் வைத்து கைதி கதையை லோகேஷ் எழுதியிருந்தாலும் இறுதியாக கார்த்தி அதில் நடித்தார்.

Continues below advertisement

2019ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரும் ஹிட் அடித்தது. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்தின் திரைக்கதையும், காட்சி அமைப்புகளும், கார்த்தியின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது. 

கார்த்தியுடன் அஞ்சாதே நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். குறிப்பாக டில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்த கார்த்தி பிரியாணி சாப்பிடும் காட்சி இன்றளவும் பலரின் ஃபேவரைட்.


கைதி ஹிட்டுக்கு பிறகு பம்பர் பரிசாக தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது. விஜய்யை வைத்து அவர் இயக்கிய மாஸ்டர் படமும் ஹிட் அடித்ததால் தமிழின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரானார் லோகேஷ்.

இதற்கிடையே நடிகர் விஜய் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துவருகிறார். படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்தது. ஆனால் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படத்தை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இதனையடுத்து விஜய் யாரின் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே இருந்தது.

இந்நிலையில் விஜய்யை லோகேஷ் கனகராஜ் மீண்டும் இயக்குகிறார். இந்தப் படத்தை விஜய்யின் துப்பாக்கி, தெறி ஆகிய படங்களை தயாரித்த கலைப்புலில் எஸ். தாணு தயாரிக்க இருப்பதாக தகவல்கல் வெளியாகியுள்ளன. உள்ளிட்ட பட

லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை தொடர்ந்து கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை அவர் இயக்கிவருகிறார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் இந்தப் படத்தையும், விஜய் வம்சியின் படத்தையும் முடித்ததும் மாஸ்டர் கூட்டணி மீண்டும் இணைகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலுஜ்ம் வாசிக்க: Kaithi Japan Release: ஜப்பானில் ரிலீஸ் ஆகிறது கைதி... கார்த்தியின் முதல் படம் இது!

Continues below advertisement
Sponsored Links by Taboola