மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அந்தப் படம் அனைவரிடத்திலும் பரவலான பாராட்டை பெற்றது. இதனையடுத்து அவர் கைதி படத்தை இயக்கினார். மன்சூர் அலிகானை மனதில் வைத்து கைதி கதையை லோகேஷ் எழுதியிருந்தாலும் இறுதியாக கார்த்தி அதில் நடித்தார்.


2019ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரும் ஹிட் அடித்தது. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்த இபடத்தின் திரைக்கதையும், காட்சி அமைப்புகளும், கார்த்தியின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது. 


கார்த்தியுடன் அஞ்சாதே நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். குறிப்பாக டில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்த கார்த்தி பிரியாணி சாப்பிடும் காட்சி இன்றளவும் பலரின் ஃபேவரைட்.




கைதி ஹிட்டுக்கு பிறகு பம்பர் பரிசாக விஜய்யை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது. விஜய்யை வைத்து அவர் இயக்கிய மாஸ்டர் படமும் ஹிட்ட அடித்ததால் தமிழின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரானார் லோகேஷ்.


மாஸ்டர் படத்தை தொடர்ந்து கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை அவர் இயக்கிவருகிறார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்நிலையில், கைதி படம் ஜப்பானில் வெளியாக இருக்கிறது.  ‘கைதி டில்லி’என்ற பெயரில் வரும் 19ஆம் தேதி  அங்கு ரிலீஸ் ஆகிறது. இதுதொடர்பான போஸ்டரும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.


ஜப்பானில் ரிலீஸ் செய்யப்படும் கார்த்தியின் முதல் படம் இது. ஏற்கனவே அங்கு முத்து உள்ளிட்ட சில ரஜினி படங்கள் மற்றும் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி ஆகியவை ரிலீஸ் ஆகியிருந்தன. 




ரிலீஸ் ஆனது மட்டுமின்றி அப்படங்களுக்கு பலத்த வரவேற்பு இருந்து. எனவே கைதி படத்துக்கும் ஜப்பானியர்கள் வரவேற்பளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக கமலை வைத்து லோகேஷ் இயக்கிவரும் விக்ரம் படத்தின் Glance கமலின் பிறந்தநாளையொட்டி நவம்பர் 7ஆம் தேதி வெளியானது. அதனைப் பார்த்த அனைவரும் கமலின் ரசிகன் என்பதை லோகேஷ் நிரூபித்துவிட்டார் என கூறி glanceஐ அதிகமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: HBD Kamal: அந்தி மழை மேகம்... வந்ததென பாடும்... கமல் பிறந்தநாள் சிறப்பு மழை பாடல்கள்!