கரூர் தவெக பரப்புரையில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து அக்கட்சித் தலைவர் மற்றும் நடிகர் விஜய் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கரூர் விபத்தை விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரிய தவெக தரப்பு மனுவை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் விஜயின் பிரச்சார வாகணத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். விஜயை கைது செய்ய கோரி நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. இப்படியான நிலையில் விஜயையும் ஆந்திரா துணை முதலமைச்சர் பவண் கல்யாணை  ஒப்பிட்டு லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸா எக்ஸ் தள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

விஜயைவிட பவன் கல்யாண் மேலானவர்

பவன் கல்யாண் நடித்து அண்மையில் வெளியான ஓஜி திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் பவன் கல்யாணுடன் பணியாற்றிய அனுபவத்தை அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் பவன் கல்யாணை விஜயோடு ஒப்பிட்டு கூறியுள்ளார். "பவன் கல்யாண் சார் ஏற்கனவே உங்களுடன் பணியாற்றியுள்ள போதிலும் , OG உண்மையிலேயே உங்கள் விஸ்வரூபத்தைப் பார்த்தது போல் உணர்ந்தேன். அந்த 16 நாட்கள் ஒரு ரோலர்-கோஸ்டர். தொடர்ச்சியான அதிரடி காட்சிகள் , உணர்ச்சிகரமான காட்சிகள், அவ்வப்போது அரசு பணிக்காக நீங்கள் மேற்கொண்ட சின்ன பயணங்கள், என ஒரு மனிதனிடம் எதிர்பார்க்க முடியா அனைத்தையும் நீங்கள்  எளிதாகவும் உறுதியுடனும் வழங்கியது சினிமா கலையின் மீதான உங்கள் ஆர்வத்தைக் காட்டுகிறது. விஜய் சார் மிகவும் கடினமாக உழைக்கும் நட்சத்திர ஹீரோ என்று நான் எப்போதும் நினைத்தேன், ஆனால் OG க்காக நீங்கள் ஒரு படி மேலே சென்றீர்கள். மீண்டும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளதற்கு நன்றி. சினிமாவுக்கு அப்பால், உங்கள் ஆட்சியை நம்பும் மக்களிடம் நேரத்தையும் பொறுப்பையும் நீங்கள் கையாளும்  விதத்தை நான் மிகவும் மதிக்கிறேன் - ஆனாலும் உங்கள் விஸ்வரூபத்தை மீண்டும் திரையில் பார்க்க விரும்புகிறோம்." என அவர் பதிவிட்டுள்ளார்

Continues below advertisement

 

 "