குஷி ரீரிலீஸ்
விஜயின் கில்லி திரைப்படம் ரீரிலீஸ் தொடர்ந்து தற்போது எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த குஷி திரைப்படம் நேற்று செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 25 ஆண்டுகளுக்குப் பின் வெளியான குஷி படத்திற்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பு கொடுத்துள்ளார்கள். 90ஸ் கிட்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் கூட்டம் கூட்டமாக திரையரங்கை நோக்கி படையெடுத்து படத்தின் ஒவ்வொரு காட்சியையும் கொண்டாடி வருகிறார்கள். குஷி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
குஷி ரீரிலீஸ் வசூல்
தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் 200 திரையரங்குகளில் குஷி திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாளில் குஷி திரைப்படம் ரூ 70 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.