• கல்வியில் சிறந்த தமிழ்நாடு பங்கேற்றதற்கும், காலை உணவுத் திட்டம் தெலங்கானாவில் செயல்படுத்தப்படும் எனற் அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் அறிவிப்பிற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவிப்பு.
  • சென்னையில் அரசியல் ரீதியாக தான் யாரையும் சந்திக்கவில்லை என செங்கோட்டையன் விளக்கம். ஓபிஎஸ்-ஐ சந்தித்ததாக வதந்த பரப்பப்படுவதாக வேதனை.
  • அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த மருது அழகுராஜ், திமுக செய்தித் தொடர்பு குழு துணைத் தலைவராக நியமனம்.
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தொடர்ந்து 3-வது முறையாக டி. ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 75 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற கட்சியின் விதியை தளர்த்தி தேர்வான முதல் உறுப்பினர் இவர்தான்.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலையில், ஒரு கிராம் ரூ.10,550-க்கும், ஒரு சவரன் ரூ.84,400-க்கும் விற்பனை. வெள்ளியின் விலை வரலாறு காணாத அளவில் கிராம் ரூ.153-ஆக உயர்வு.
  • மத்திய வடக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை மையம் தகவல்.
  • தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் அழகுமீனா உத்தரவு.
  • தென்காசி ஐந்தருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிப்பு.
  • சேலத்தில், வணிக வளாக முதல் மாடிக்கு கருணாநிதி பெயர் சூட்ட அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு. எடப்பாடி நகரட்சி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு.
  • தஞ்சை பெரிய கோவிலில், இடி, மின்னலுடன் மழை பெய்த நிலையில், கொட்டும் மழையிலும் நிறுத்தாமல் பரதம் ஆடி, பெருவுடையாருக்கு இசை அஞ்சலி செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • வேளாங்கண்ணி அருகே, கோவில் விழாவில் தீக்குண்டத்தில் பெண்ணை தூக்கிக்கொண்டு சென்ற நபர் கால் இடறி, இருவரும் கீழே விழுந்து படுகாயம்.

 

Continues below advertisement

Continues below advertisement