விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் படத்திற்கு இன்னும் தணிக்கை சான்ரிதழ் வழங்கப்பட்டாதது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தணிக்கை குழுவைத் தொடர்ந்து மறு தணிக்கை குழு இப்படத்தை பார்வையிட்ட பின்னர் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரியுள்ளது. தணிக்கை குழு சொன்ன திருத்தங்களை செய்தபின்னரும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டாதது விஜய் ரசிகர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

விஜயின் திரையுலக பயணத்தில் கடைசி படமாக உருவாகியிருக்கும் ஜனநாயகன் படத்தை எச் வினோத் தயாரித்துள்ளார். எச் வினோத் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே , மமிதா பைஜூ ,பாபி தியோல் மற்றும் பல்வேறு நடிகர்கள் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் முழு நேர அரசியலுக்கு வருவதற்கு முன் வெளியாகும் படம் என்பதால் இப்படம் பல தரப்புகளிடம் இருந்து நெருக்கடியை சந்தித்து வருகிறது. படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையிலும் இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாதது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

தணிக்கை சிக்கலில் ஜனநாயகன் 

ஜனநாயகன் படத்தின் இறுதிகட்ட பணிகள் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி முடிவடைந்தன. டிசம்பர் 18 ஆம் தேதி படம் மத்திய தணிக்கை வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. டிசம்பர் 19 ஆம் தேதி தணிக்கு குழுவினர் படத்தை பார்வையிட்டு படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்படும் என்றும் ஒரு சில திருத்தங்களையும் படக்குழுவினருக்கு பரிந்துரைத்தனர். படத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் அந்த காட்சிகளை திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன.  தணிக்கை குழு சொன்ன திருத்தங்களை செய்து டிசம்பர் 24 ஆம் தேதி மறுதணிக்கைக்கு படத்தை அனுப்பினர் . இதனைத் தொடர்ந்து அடுத்த 10 நாட்களுக்கு தணிக்கு குழுவினர் தரப்பில் எந்த பதிலும் இல்லை. 

Continues below advertisement

படத்தின் மீது புகார்

ஜனவரி 5 ஆம் தேதி தணிக்கை குழுவின் சென்னை கிளை படத்தை மறுதணிக்கை குழுவிற்கு அனுப்புவதாக தெரிவித்தது. படத்தில் உள்ள சில காட்சிகள் ராணுவத்தினரையும் , மத ரீதியான உணர்வுகளை புண்படுத்துவதாக மர்ம நபர் ஒருவரால் புகாரளிக்கப்பட்டதாக தணிக்கை குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இந்த நபரின் அடையாளத்தை அவர்கள் வெளியிடவில்லை

படக்குழு அவசர வழக்கு

பெரும் பொருட்செலவில் இப்படத்தை எடுத்துள்ள தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் படத்திற்கு தணிக்கை வழங்க கோரி அவசர வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. குறிப்பிட்ட தேதிக்குள் தணிக்கை வழங்க வேண்டும் என்று தணிக்கை குழுவுக்கு எந்த கட்டாயமும் இல்லை என தணிக்கை வாரியம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி படத்தின் மீது புகாரளித்த நபர் பற்றிய அடையாளங்களை வெளியிடும் படி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது . 

தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டாததால் பெரும்பாலான திரையரங்குகளில் ஜனநாயகன் படத்திற்கு இன்னும் முன்பதிவுகள் தொடங்கப்படவில்லை. இன்று இந்த வழக்கில் படக்குவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுமா என ரசிகரக்ள் எதிர்பார்ப்பில் உள்ளனர்