ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் !! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Continues below advertisement

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் ( வயது 30 ) இவர் கடந்த 2022 - ம் ஆண்டு சென்னையில் பணியாற்றிய போது, திருமங்கலம் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுமியை, காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, திருமங்கலம் மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த சக்திவேல், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததை அடுத்து, திருமங்கலம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார், டிசம்பர் மாதம் விழுப்புரத்தில் வைத்து சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Continues below advertisement

இந்த வழக்கு, திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, சக்திவேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் 65,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

பேருந்து நிறுத்தத்தில் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு, தப்பியோடிய நபரை போலீசார் துரத்தி பிடித்து கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 22 வயது இளம் பெண். இவர், கீழ்ப்பாக்கம் பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற இவர், நேற்று முன்தினம் அதிகாலை சென்னை திரும்பினார்.

அங்கிருந்து தங்கியிருந்த விடுதிக்கு செல்வதற்காக புரசைவாக்கம், ராஜா அண்ணாமலை சாலையில் உள்ள தாசபிரகாஷ் பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தார். பேருந்து வராததால் 'ரேபிடோ' செயலியில் வாகனத்தை 'புக்' செய்து மொபைல் போனில் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக நடைபயிற்சி செய்த நபர், திடீரென இளம்பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு தப்பியோடினார். இதனால் அச்சமடைந்து அழுது கொண்டிருந்த அப்பெண்ணிடம், அவ்வழியாக சென்ற ரோந்து போலீசார் விசாரித்தனர். அவர் சொன்ன அடையாளத்தை வைத்து அந்த நபரை துரத்தி பிடித்த போலீசார், அப்பெண்ணிடம் காட்டி உறுதி செய்தனர்.

இதையடுத்து கீழ்ப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் யாதவ் ( வயது 36 ) என்பதும், எழும்பூரில் உள்ள இனிப்பு கடையில் வேலை செய்வதும் தெரிந்தது. விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டார்.