Just In





Jana Nayagan : ஹைப் ஏத்துறாங்களே... விஜயின் ஜன நாயகன் ரிலீஸ் தேதி அப்டேட்..
Jana Nayagan Release Date : எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் வெளியிட்டுள்ளது படக்குழு

நடிகர் விஜயின் திரை வாழ்க்கை முடிவுக்கு வர இன்னும் ஒரு படமே மீதமுள்ளது. ஒருபக்கம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு ரெடியாகி வரும் விஜய் இன்னொரு பக்கம் தனது 69 ஆவது படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் விஜய் முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபட இருக்கிறார். இன்னும் சிலருக்கு விஜய் மறுபடியும் சினிமாவிற்கு திரும்பி வருவார் என்கிற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.
ஜன நாயகன்
எச் வினோத் இயக்கத்தில் விஜய் தற்போது ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே , மமிதா பைஜூ , பாபி தியோல் ,கெளதம் மேனன் , பிரியாமனி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கிறர். கே.வி. என் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியிட்டுள்ளது படக்குழு
ஜன நாயகன் ரிலீஸ் தேதி
ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது