மத்திய அரசு ஏற்றது... மாநில அரசு வியாபாரிகளை ஏமாற்றிவிட்டது - விக்கிரமராஜா

ஆன்லைன் நிறுவனங்கள் வந்த பிறகு 20% கடைகள் மூடப்பட்டுள்ளது. சாமானிய வணிகர்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.

Continues below advertisement

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.

Continues below advertisement

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் விக்கிரமராஜா, "தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் வரும் மே 5ம் தேதி 42வது வணிகர் தினத்தன்று, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வணிகர் அதிகார பிரகடன மாநாடு நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பிஎஸ்.கோயல் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க வேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குறிப்பாக வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள், கட்டிட வரி, மின்சார கட்டணம், லைசன்ஸ் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச உள்ளோம். ஆன்லைன் வணிகம் வாயிலாக வணிகர்களின் வியாபாரம் 87 சதவீதம் சுரண்டப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் முழுமையாக எங்களின் வணிகத்தை அகற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் வணிக நிறுவனங்கள் சுமார் 10 லட்சத்திற்கும் மேல் கெட்டுப்போன பொருட்களை விற்பனை செய்வதாக தகவல் வந்துள்ளது. பலகோடி மதிப்பில் கெட்டுப்போன பொருட்களை வாங்கி ரீபேக் செய்து விற்பனை செய்கின்றனர். இதற்கான ஆதரங்களை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சேகரித்து வருகிறது. 

சாமானிய வணிகர்களை பாதுகாப்பதற்கு மத்திய அரசும், மாநில அரசும் சிறப்பு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்த உள்ளோம். இது நிறைவேற்றாத போது, அகில இந்திய சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மூலமாக நாடு தழுவிய போரட்டம் நடத்த உள்ளோம். டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் போராட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட உள்ளது. சாமானிய வணிகர்களுக்கு பாதுகாப்பு குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும்” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை தொடர்பாக ஐந்து நாட்களுக்கு முன்பு அமைச்சர் மா சுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து பேசி உள்ளோம். கடைசி சீல் வைப்பது, சாமானியர்கள் கடைகளில் ஆய்வு என்ற பெயரில் சில அதிகாரிகள் கையூட்டு பணம் வாங்குவது தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தினோம். ஆன்லைன் நிறுவனங்கள் வந்த பிறகு 20% கடைகள் மூடப்பட்டுள்ளது. சாமானிய வணிகர்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார். ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாக்களிக்க முடியாது. நாங்கள் தான் இந்த நாட்டின் வாக்காளர்கள். அமேசான், டி மாட் வாக்கு போட முடியாது. ஜிஎஸ்டி என்பது வியாபாரிகளுக்கு சோதனையாக உள்ளது. ஜிஎஸ்டி வந்த பிறகு வியாபாரம் செய்ய வேண்டுமா என்கின்ற அழுத்தம் வியாபாரிகளிடையே எழுந்துள்ளதாக தெரிவித்தார். வணிகர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு பட்ஜெட்டில் தனி மனித வருமானம் ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக மாற்றி உள்ளார்கள். மாநில அரசு பட்ஜெட் வியாபாரிகளுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது" என்று கூறினார்.

Continues below advertisement