கோட் படத்தில் விஜயுடன் த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


கோட் (G.O.A.T)


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா , பிரபு தேவா, பிரஷாந்த், மோகன் , வைபவ், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏ.ஜி எஸ் என்டர்டெயின்மெண்ட்  இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.


கோட் அப்டேட்


கோட் படத்தின் படப்பிடிப்பு சென்னை ,ஹைதராபாத், தாய்லாந்து, மாஸோ , துருக்கி,  இஸ்தான்புல் ,இலங்கை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட்களை எதிர்பார்த்து படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் சமூக வலைதளங்களில் கேட்டு வருகிறார்கள். கோட் படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கரின் கேள்விக்கு இவ்வளவு சீக்கிரமாவா என்று வெங்கட் பிரபு பதிலளித்திருந்தார். தற்போது வெங்கட் பிரபு கோட் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 


கெளரவ தோற்றத்தில் த்ரிஷா






கோட் படத்தில் நடிகை த்ரிஷா கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. இந்த தகவல் படக்குழு சார்பில் உறுதிப்படுத்தாமல் இருந்த நிலையில் தற்போது த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இதன் மூலம் கோட் படத்தில் அவர் நடித்துள்ளதை ரசிகர்கள் உறுதி செய்துள்ளார்கள். கோட் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா ஒரு பாடலுக்கு செம்மையாக நடனமாடி உள்ளதாக கூறப்படுகிறது. வெங்கட் பிரபு சொன்ன அந்த அப்டேட் த்ரிஷவை பற்றியதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது




மேலும் படிக்க : Shanthi Williams: வாங்காத அடியே இல்லை.. நடுத்தெருவில் விட்ட கணவன்.. சாந்தி வில்லியம்ஸின் சோகக்கதை!


Vijay Antony: இயேசு மது குடித்ததாக சொன்ன விஜய் ஆண்டனி.. கடுப்பான தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு!