வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றையும் பாசிட்டிவாக எடுத்து கொள்ள வேண்டும் என இயக்குநரும், விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகங்களை கொண்வர் எஸ்.ஏ.சந்திரக்சேகர். இவர் 1981ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார். தமிழ் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வந்தார். இவரது இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் நடித்திருந்த படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன.
அண்மையில் பாரதிராஜா நடிப்பில் வெளிவந்த கருமேகங்கள் கலைகின்றன படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் தனக்கு அறுவை சிகிச்சை நடந்ததாகவும், எல்லாவற்றையும் பாசிட்டிவாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும் வீடியோ பதிவு ஒன்றை எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட்டுள்ளார். அதில், “நம் வாழ்க்கையில் அடிக்கடி சில மறக்க முடியாத நிகழ்வுகள் நடைபெறும். சமீபத்தில் நடந்த சில சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் எப்பொழுதுமே ஆக்டிவான இருப்பது அனைவரும் அறிந்தது. ஆனால் கடந்த 3மாதங்களாக எனது எனர்ஜி குறைவது போல உணர்வு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவரை அணுகினேன். எனது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் உடலில் சில பிரச்சனை இருப்பதாக கூறி உடனே அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தினர். அதன்படி, சர்ஜரி செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன். இதை எதற்கு சொல்கிறேன் என்றால், வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை ஏற்று கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் இப்படி நடந்து விட்டதே, அறுவை சிகிச்சை செய்து விட்டோமே என்று நினைத்தால், மன அழுத்தம் தான் அதிகரிக்கும். அதற்கு பதிலாக எனக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரை அணுகினேன். அவர் ஸ்கேன் எடுத்து உடனே சர்ஜரி செய்தேன். அது நல்ல விஷயம். இப்படி எல்லாதையும் பாசிட்டிவாக எடுத்து கொண்டால் எல்லாமே நன்றாக நடக்கும். எல்லாதையும் பாசிட்டிவாகவே எடுத்து கொள்வோம். என்னுடைய அனுபவத்தை ஷேர் செய்து கொள்கிறேன்” என பேசியுள்ளார்.
மேலும் படிக்க: Daiji First Look: அடுத்த ‘காந்தாரா'வா... ‘டைஜி’ பட போஸ்டரால் அசரடிக்கும் நடிகர் ரமேஷ் அரவிந்த்!